பூந்தமல்லியில் தம்பதி பலி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 அக்
2018
23:39

பூந்தமல்லி: பூந்தமல்லியில், இளம்தம்பதி இறந்த வழக்கில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், வெங்கடேசன், 25; கூலித் தொழிலாளி. இவரது மனைவி, துர்கா, 23. இவர், பூந்தமல்லி நகராட்சியில், ஒப்பந்த ஊழியராக வேலை செய்து, ஒரு மாதத்திற்கு முன் நின்றுவிட்டார்.இருவரும், நான்கு ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, சுப்ரியா, 3, சிவன்யா, 2, என்ற, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவும், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குழந்தைகளை, அதே பகுதியில் உள்ள, துர்காவின் பாட்டி, மீராபாய் வீட்டிற்கு, வெங்கடேசன் அழைத்து சென்றார்.நேற்று காலை, குழந்தைகளுடன் மீராபாய், வெங்கடேசன் வீட்டிற்கு சென்றார். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும், கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், பின்பகுதி ஜன்னலை திறந்தார்.அப்போது, வெங்கடேசன் துாக்கில் தொங்கி நிலையில், இறந்து கிடந்தார். துர்கா, கட்டிலில் இறந்து கிடந்தார்.தகவலறிந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X