போலீஸ் டைரி...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 அக்
2018
04:17

ஆட்டோவில் தவறவிட்ட ரூ.3 லட்சம்


புதுச்சேரி, நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் உதயகுமார், 62. இவரது மனைவி ராஜேஸ்வரி, 58. இவர்கள், நேற்று முன்தினம் மாலை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் உள்ள வங்கியில் இருந்து, 3 லட்சம் ரூபாய் எடுத்தனர். அங்கிருந்து கோடம்பாக்கம், காமராஜர் காலனி, நான்காவது தெருவில் உள்ள மகள் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவில் இருந்து இறங்கும் போது, பணப்பையை எடுக்க மறந்துவிட்டனர். கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



சிறுமியிடம் சில்மிஷம் செய்தவன் கைது


சூளைமேடு காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 14 வயது சிறுமியின் பெற்றோர், புகார் மனு ஒன்றை அளித்தனர்.அதில், 'சூளைமேடு, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த, தர்மலிங்கம் என்பவன், என் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இதனால், தன் மகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தர்மலிங்கத்தை பிடித்து விசாரித்தனர். இதில், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவனை, குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.



டாஸ்மாக் கடையில் தகராறு


தி.நகர், பார்த்தசாரதிபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு, தி.நகர், பாரதி நகரைச் சேர்ந்த, சிவா, 24, என்பவன், மது வாங்க சென்றான். கடை ஊழியர் குமாருக்கும், சிவாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவா, காலி பீர் பாட்டிலை எடுத்து, கடைக்குள் வீசினான். இதில், கடையில் இருந்த, ஐந்து மதுபாட்டில்கள் உடைந்தன. பாண்டிபஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.



பஸ் ஊழியரை தாக்கியவனுக்கு வலை


சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 50; ஐ.ஓ.சி., பஸ் டிப்போ நடத்துனர். இவர், நேற்று காலை, 11:00 மணியளவில், ஐ.ஓ.சி.,யில் இருந்து பிராட்வே செல்லும், தடம் எண், '44' பேருந்தை வெளியில் எடுத்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த நபர், ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கிவிட்டு தப்பினான். ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



உறுதிமொழியை மீறியவனுக்கு சிறை


சூளைமேட்டைச் சேர்ந்தவன், ஜெகன்நாதன், 42. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவன், ஆக, 21ம் தேதி, 'எந்த தவறும் செய்யமாட்டேன்' என, திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடம் எழுதிக் கொடுத்தான்.ஆனால், அவன் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது, போலீசாருக்கு தெரியவந்தது. உறுதி மொழியை மீறிய ஜெகன்நாதனை, 323 நாட்கள் சிறையில் அடைக்க, துணை கமிஷனர் உத்தரவிட்டார்.



வாலிபருக்கு கத்திக்குத்து


மேற்கு அண்ணாநகர், பாடிக்குப்பத்தைச் சேர்ந்தவர், கார்த்திக், 31. அவரது மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு, கார்த்திக் உணவருந்த, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். கார்த்திக் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால், கார்த்திக்கை குத்திவிட்டு தப்பினர்.படுகாயமடைந்த கார்த்திக், மகன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார். சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X