கனமழை பெய்தால் வெள்ளத்தில் சென்னை தத்தளிக்கும்! ...மழைநீர் வடிகால் இணைப்பு பணி அரைகுறை-
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 நவ
2018
22:49

சென்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மற்றும் துார்வாரும் பணிகள் முழுமை பெறாத நிலையில், அதிக மழை பெய்தால், பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



சென்னையில், 2015ல் பெய்த கனமழையால், நகரின் பல இடங்கள் நீரில் மூழ்கின. இதற்கு, மாநகராட்சியின் மழைநீர் வடிகால்வாய் துார்வாரப்படாதது, நீர்வழித்தடங்களுடன், வடிகால்கள் இணைப்பு செய்யப்படாதது போன்றவை காரணமாக அமைந்தது.பருவ மழைஇதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டது. ஆனாலும், முறையான திட்டமிடல் இல்லாமல், ஆண்டுதோறும், வடகிழக்கு பருவ மழையின்போது, சென்னை நகரம், வெள்ளத்தில் பாதிக்கப்படும் நிலையே உள்ளது.




நடப்பாண்டில், வெள்ள பாதிப்பை தடுக்க, மாநகராட்சி, 1,894 கி.மீ., உள்ள, 7,350 மழைநீர் வடிகால்வாய்களை துார்வாரவும், சிறிய பழுதுகளை நீக்கவும், 38.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.இது தவிர, இணைப்பு இல்லாத மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால் என, 370 பகுதிகள் கண்டறியப்பட்டு, 290 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகின்றன.இந்த பணிகள் அனைத்தும், செப்டம்பரில் துவங் கப்பட்டன.




இதில், மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள், 90 சதவீதம் முடிந்து விட்டதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.ஆனால், இணைப்பு இல்லாத மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள், 50 சதவீதம் கூட முழுமை பெறவில்லை.ராயப்பேட்டை, ஒயிட்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், பள்ளி சாலை, பாண்டி பஜார், நெல்சன் மாணிக்கம் சாலை, சைதாபேட்டை, காவேரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பழுதடைந்த மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டு, வடகிழக்கு பருவமழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 16 நீர்நிலை பகுதிகளில், பெரும்பாலானவற்றில், நீர்வரத்து மற்றும் போக்கு கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை.சுரங்கபாதை, மேம்பாலங்கள் ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிகால்கள் துார்வாரப்படவில்லை. அதே போல், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில், துார்வாரும் பணிகள் நடைபெறவில்லை.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள, மதுரவாயல் நெடுஞ்சாலையிலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.




சென்னையில் அனைத்து துறைகளும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, சில இடங்களில் இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி, மழை காரணமாக பாதியில் நிறுத்தி வைத்துள்ளன.தற்போது, பெய்து வரும் மழைக்கே, பெரும்பாலான சாலைகளில், நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.அதிக கனமழை பெய்தால், 2015ஐ போல், சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:மழைநீர் தேங்கும் இடங்களில், உடனடியாக நீரை அகற்ற, பல்வேறு வகையில், 578 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.மழைநீர் வடிகால் பாதியில் நின்ற பகுதிகளில், தேங்கும் நீரை, ஒப்பந்த தாரர்களே அகற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பயிற்சிவெள்ள பாதிப்பில் இருந்து, மக்களை மீட்பதற்காக, தன்னார்வலர்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர்கள் தலா, 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 52 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியாக, கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.அந்த பகுதி, பேரிடர் மேலாண்மை வீரர்களால் கண்காணிக்கப்படும்.




மேலும், 176 நிவாரண முகாம்களில், பொதுமக்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.அடையாறில் பாதிப்பு!அடையாறு மண்டலம், 170, 171, 179 ஆகிய வார்டுகளின், 35 தெருக்களில், 18 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால் கட்டும் பணி துவங்கியது. இதில், 18 தெருக்களில், வடிகால் பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள தெருக்களில், மழையால் பணி துவங்காமலும், பாதியிலும் நிற்கிறது.சில இடங்களில், மின்மோட்டார் மூலம், நீரை இரைத்து பணி செய்கின்றனர். அப்படி செய்தாலும், நேரடியாக மழைநீர் விழுவதால், கான்கிரீட் வலுபெறுவதில் சிக்கல் உள்ளது.




இதனால், வடிகால்களின் தரம் கேள்விக்குறியாகி விடும். இதை கருத்தில் கொண்டு, பணி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.விரைவில் நிறைவு பெறும்!சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி வழியாக செல்லும் சி.டி.எச்., மாநில நெடுஞ்சாலையில், மூன்று மாதங்களுக்கு மேலாக, மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. திருமுல்லைவாயலில் இருந்து, திருநின்றவூர் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில், எட்டு மழைநீர் வடிகால்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




இதில், நான்கு வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இரண்டு வடிகால்களில், ஒரு பாக பணிகள் நிறைவடைந்து விட்டன. முடிச்சூரில் மோசம்!தாம்பரம்,- முடிச்சூர் சாலையில், காந்தி சாலை துவங்கி, கிருஷ்ணா நகர் வரையும், கிருஷ்ணா நகர், 8வது தெரு முதல், பாப்பான் கால்வாய் வரையும், நெடுஞ்சாலை துறையால், மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணி, ஓராண்டை கடந்தும், மந்தமாக நடக்கிறது.




அதே போல், அடையாறு ஆற்றின் குறுக்கே, முடிச்சூர் -- மணிமங்கலம் சாலையில், வரதராஜபுரம் அருகிலும், தாம்பரம்- - சோமங்கலம் சாலையில், சமத்துவ பெரியார் நகர் அருகிலும், புதிதாக பாலங்கள் கட்டப்படுகின்றன. இதற்காக, ஆற்றினுள் அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதைகள், மலைப்பாதையை விட மோசமாக சேதமடைந்துள்ளன.




நமது நிருபர் -


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NRajasekar - chennai ,இந்தியா
06-நவ-201804:14:49 IST Report Abuse
NRajasekar இவர்கள் ரோட்டுக்கு அரை அடி கீழே வாய்க்கால் கட்டி முகத்துவாரம் மூடி விடுகிறது வாட்டர் கால்வாய்க்குள் போக வேயில்லை இதுக்கு கோடிகணக்கில் பணம் நான் ஜெயசங்கர் ஸ்ட்ரீட்ஸ் குத்தகை காரரிடம் கேட்ட போது இப்படி தான் எல்லா இடத்திலும் கட்டுகிறாம் என்றார் வாட்டர் போக இவைகள் உபயோகப்படப் போவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-நவ-201808:41:03 IST Report Abuse
Srinivasan Kannaiya போன வருஷம் கட்டிய மழை நீர் கால்வாய்களை காணுங்கள்..அவை மண் மூடி போய் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
05-நவ-201803:31:27 IST Report Abuse
Manian அட என்ன கவலை. பழைய அனுபம் இருக்கியே. பின்னே மக்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? ஓடடை வித்தப்போ கிடைச்ச காஸாஹி உள்ளச்சப் பயணம் போகாம வச்சிருக்குறவநுக எதுக்கு கவலை படணுமாம் போடடை வாடகைக்கு வாங்கிடலாமே- போட்டு சர்விஸ் சென்று- அடிதடி ஆறுமுகம், 9129292999 , புது நோடடா இருந்தாதான் சவாரி வரலாம். அரசியல் வியாதிங்களுக்கு சொந்தக்கானுகளுக்கு 10 % தள்ளு படி உண்டு. கோடு- "அடுத்த மந்திரி" 20 ரூவா டோக்கன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X