ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!  வேளச்சேரி பரணி தெரு ஆக்கிரமிப்புக்கு யார் பொறுப்பு?� 60 அடி அகலம் சாலை, 18 அடியாக சுருங்கிய வினோதம் குட்டையை குழப்பும் மாநகராட்சி - குடிசை மாற்று வாரியம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 நவ
2018
23:59
பதிவு செய்த நாள்
நவ 08,2018 23:43

வேளச்சேரி: சென்னை, வேளச்சேரியில், 60 அடி அகலம் கொண்ட பரணி தெரு, கடுமையான ஆக்கிரமிப்பு காரணமாக, 18 அடியாக சுருங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள், பகுதிமக்கள் மிகுந்த தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.



கோர்ட் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்பை அகற்ற, மாநகராட்சி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாறிமாறி புகார் தெரிவிக்கின்றனர்.அடையாறு மண்டலம், 179வது வார்டு, வேளச்சேரி, உதயம் நகர், மகாவீர்நகர் உள்ளிட்ட பகுதிகளில், 23 தெருக்கள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு வசிப்பவர்கள், வேளச்சேரி- - தரமணி நுாறடி சாலைக்கு, பரணி தெரு வழியாக செல்ல வேண்டும். மேலும், எம்.ஜி.ஆர்.நகர், கல்லுக்குட்டை பகுதிவாசிகள் மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் செல்லும் இதர பகுதியை சேர்ந்தவர்களும், பரணி தெரு வழியாகவே செல்கின்றனர்.பரணி தெரு, 0.5 கி.மீ., துாரம், 60 அடி அகலம் கொண்டது.




இதில், 0.2 கி.மீ., துாரம் வரை, 12 முதல், 18 அடி அகலம் மட்டுமே உள்ளது.இந்த, 0.2 கி.மீ., துாரத்தில், சாலையின் இரு பகுதியிலும், குடிசை மாற்று வாரியம், பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கி உள்ளது. இதில், 52 பயனாளிகள், தெருவை ஆக்கிரமித்து கடைகள் கட்டி உள்ளனர். இதனால், சாலை சுருங்கி உள்ளது.'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், நெரிசல் அதிகரித்து, தெரு வழியாக செல்பவர்கள், பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லவும் வழி கிடைப்பதில்லை.ஆக்கிரமிப்பு தொடர்பாக, 2008ல், தாக்கல் செய்த வழக்கில், 'சி.எம்.டி.ஏ., வரைவு திட்டப்படி, 60 அடி அகல தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை, குடிசை மாற்று வாரியம் அகற்ற வேண்டும்; மாநகராட்சி வசம் சாலையை ஒப்படைக்க வேண்டும்' என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.




ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு, பகுதிவாசிகள் புகாரின் அடிப்படையில், பெயரளவுக்கு கடைகள் முன் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஒரிரு வாரத்தில், மீண்டும் பழைய நிலையில் தெரு ஆக்கிரமிக்கப்பட்டது.'குடிசை மாற்று வாரியம், ஆக்கிரமிப்பை அகற்றி தந்தால், சாலையை விரிவாக்கம் செய்ய தயார்' என மாநகராட்சியும், 'சாலை மாநகராட்சி வசம் உள்ளதால், சி.எம்.டி.ஏ., பிளான்படி, அவர்கள் தான் விரிவாக்கம் செய்ய வேண்டும்' என, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும், மாறிமாறி தங்கள் பொறுப்பை தட்டி கழித்து வருகின்றனர்.




தெருவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.60 அடி அகல பரணி தெருவை ஒட்டி, வீடுகட்ட குடிசை மாற்று வாரியம் இடம் வழங்கி உள்ளது. பயனாளிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துடன், தெருவையும் சேர்த்து ஆக்கிரமித்து, கடைகள் கட்டி உள்ளனர். அதிகாரிகள் அலட்சியத்தால் தான், பரணி தெரு ஆக்கிரமிப்பில் சிக்கியது.




உயர் அதிகாரிகள் தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தெருவை அகலப்படுத்த வேண்டும்.பகுதிவாசிகள்ஆக்கிரமிப்பில் உள்ள பரணி தெருவை ஒட்டிய பகுதி, குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமானது. பிரச்னை நீதிமன்றம் வரை சென்றதால், அவர்கள் தான், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நாங்கள் சாலையை சீரமைக்க தயாராக உள்ளோம்.




மாநகராட்சி அதிகாரிகள்பரணி தெரு முழுவதும், மாநகராட்சி பராமரிப்பில் உள்ளது. அவர்கள் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை, அவர்கள் தான் அகற்ற வேண்டும். நாங்கள், ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்


 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
10-நவ-201818:53:22 IST Report Abuse
samuelmuthiahraj காஞ்சிபுரத்தில் கூட அத்துணை இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் தான் சாலைகள் அனைத்தும் சுருங்கிக்கொண்டே வருகிறது காவல் துறையினரும் சாலைகளை ஆக்கிரமிப்பில்லா சாலைகளாக ஆக்கிடாமல் அத்துணை சாலைகளையும் ஒரு வழி சாலையாக மாற்றுகின்றனர் மக்களை ஏமாற்றுகின்றனர் மேலும் ஓவர் முன்னாள் எம் எல் ஏ காஞ்சிபுரம் மகேந்திரபல்லவன் தெருவும் கே டி எஸ் மணி தெருவினையும் இணைக்கும் குறுக்கு சாலையினையும் அதன் அருகாமையிலுள்ள பொது இடத்தினையும் ஆக்கிரமிப்பு செய்வதை அகற்றிட எவரும் இதுவரை முன்வரவில்லை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமே ஒத்துழைப்பு அநீதிகளுக்கு தருகின்றது
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
10-நவ-201802:20:14 IST Report Abuse
Manian இதற்கு காரணம், பணம் பெற்று இவர்களை தேர்ந்தெடுத்த மக்களே. ஓட்டிற்கு கொடுத்த காசை பொதுஜன தரைவழியாக வசூலீக்கிறார்கள். இப்போ என்ன செய்யறதா உத்தேசம்?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
09-நவ-201813:49:36 IST Report Abuse
 nicolethomson இந்த ஆக்ரமிப்பு செய்வோர் யாரென்று நினைக்கிறீர்கள், பொதுமக்களே, ஒட்டுக்கும் காசு வாங்கி அரசு சொத்தையும் அபகரித்து சமூக வலைத்தளத்தில் ஆட்சியாளர்களை ஏளனம் செய்து வயிறு பிழைக்கும் இந்த மக்களை ஸ்டாப்களின் திருமா போன்றோர் ஒன்றும் சொல்லாமல் ஓட்டுக்காக அடங்கி செல்வது தான் வேதனை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X