திருமழிசையில் தடையை மீறி நிலம் எடுப்பு? வீட்டு வசதி வாரியத்திற்கு கடும் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 நவ
2018
23:52

நீதிமன்ற தடையை மீறி, துணை நகர திட்டத்திற்கு, விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில், மாவட்ட வருவாய் துறையும், வீட்டுவசதி வாரிய அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக, திருமழிசை, குத்தம்பாக்கம் கிராம விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.சென்னை, பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில், 1,500 ஏக்கரில் துணை நகரம் அமைக்க, வீட்டுவசதி வாரியம், 1996ல் திட்டமிட்டது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக, இத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.கடும் எதிர்ப்புஇதில், குறிப்பிட்ட சில பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்த, உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு, நிலுவையில் உள்ளது.இதன் பின், இங்கு, 311 ஏக்கர் நிலத்தில், 12 ஆயிரம் வீடுகள் உள்ள துணை நகரம் அமைக்க, வீட்டுவசதி வாரியம், 2011ல் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது.இதற்கும் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இதில், பேச்சு நடத்தி பெறப்பட்ட, 112 ஏக்கர் நிலத்தில் மட்டும், வீட்டுவசதி வாரியம் பணிகளை செய்து வந்தது. இதற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணிகள், தற்போது நடந்து வருகின்றன.இதில் புதிய திருப்பமாக, நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலங்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் துணையுடன், வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.தடை விதிப்புஇது குறித்து, திருமழிசை, குத்தம்பாக்கம் கிராம விவசாயிகள் நலச்சங்க செயலர், வெங்கடேஷ்வரலு கூறியதாவது:துணை நகர திட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட, 311 ஏக்கரில், 112 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள, 199 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளுக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இத்தடை உத்தரவை மீறி, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலத்தை, முள் கம்பி வேலி அமைத்து கையகப்படுத்த, அக்., 20, 21 தேதிகளில், வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர்.இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, திரும்பி சென்ற அதிகாரிகள், சமாதான பேச்சு என்ற பெயரில், விவசாயிகளை சிறு சிறு குழுக்களாக அழைத்து மிரட்டுகின்றனர். இதனால், விவசாயிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.வீட்டுவசதி வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகளின் இந்த போக்கு குறித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளோம். முதல்வர், தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு, இது குறித்து தெரிவித்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்


- நமது நிருபர் -.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X