கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்... மீட்கப்படுமா?உத்தரவுகள் இருந்தும், 'உறங்கும்' துறை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

13 நவ
2018
04:32
பதிவு செய்த நாள்
நவ 12,2018 23:39

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; அவற்றை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பகுதிகளில், தொல்லியல் சிறப்பு வாய்ந்த வரலாற்றுச்சான்றுகள், கோவில்கள் ஏராளமாக உள்ளன.


கொழுமம் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், தாத்தேத்ராயர், தாண்டேஸ்வரசுவாமி கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், அர்ச்சனேஸ்வரர் கோவில் என, 50க்கும் மேற்பட்ட ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான கோவில்கள் உள்ளன.அதே போல், அறநிலையத்துறை பட்டியல் இனத்தில் சேராத சிறிய கோவில்கள், 208 உள்ளன. இதிலும், பெரும்பாலான கோவில்கள், பல நுாற்றாண்டு பழமையானவையாக உள்ளன.மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், கோவில்களே நிர்வாக மையமாக இருந்தன. அக்கோவில்களில், நித்ய பூஜைகள், விழாக்கள் சிறப்பாக நடக்கவும், அர்ச்சகர், பணியாளர்கள் தடையில்லாமல், கோவில் பணி மேற்கொள்ளும் வகையில், மானிய நிலங்களும் ஒதுக்கப்பட்டன.


இவ்வாறு, ஒவ்வொரு கோவிலுக்கும் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கோவில் நிலங்களை பராமரிக்காததால், ஆக்கிரமிப்புகளாகவும், ஆவணங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன.பழைய ஆவணங்கள் அடிப்படையில், கோவில் நிலங்களை கண்டறிந்து, அவற்றை மீட்கவும், கோவில் நிலங்கள் விற்பனையை தடுக்கும் வகையில், பதிவுத்துறை அலுவலத்தில், சர்வே எண் வாரிய தடையும் விதிக்கப்பட்டது.


ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், பழமையான கோவில்கள் ஏராளமாக இருந்தும், கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் மாயமாகியுள்ளன. இதனால், பல கோவில்கள் பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வருகிறது.அரசு உத்தரவோடு, உயர் நீதிமன்ற உத்தரவுகளும் கோவில் நிலங்கள் அனைத்தையும் மீட்க உத்தரவிட்டும், உடுமலை பகுதியிலுள்ள கோவில் நிலங்கள் குறித்த ஆவணங்கள் கூட தயார் செய்யப்படாமல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்களின் நிலை தெரியாமல் உள்ளது


.எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் பழைய கிராம ஆவணங்கள் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிய வேண்டும். பாரபட்சமற்ற முறையில், அந்நிலங்களை மீட்க வேண்டும்.விரைவில் மீட்கும் பணி!அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பழைய ஆவணங்கள் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மீட்கும் பணி துவங்கும்' என்றனர்.

 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-நவ-201820:43:00 IST Report Abuse
Bhaskaran அக்காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் தங்களின் சொத்தை கோவிலுக்கு எழுதிவைத்துவிட்டு இதனை அபகரிப்பவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ரபாவத்துக்கு ஆளாவார்கள் என்று சாசனம் எழுதிவைத்தனர் அன்று இருந்த மக்களும் பழி பாவத்துக்கு அஞ்சினர் அன்று பக்தி இருந்தது இன்று பகுத்தறிவுமேலோங்கி காராம் பசுவை தின்பவர்கள் கோவில்சொத்தை ஆட்டையை போடுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கப்போகிறது இறைவன் சிலைகளை கடத்திவிற்கும் அறநிலையத்துறை கொள்ளை கும்பலுடன் துணை சேரும் ஆட்கள் இருக்கும்வரை இது தொடர்கதையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X