போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 நவ
2018
23:55

இரண்டு வீடுகளில் 35 சவரன் திருட்டு


சூளைமேடு நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர், மாலா, 37; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, பக்கத்து வீட்டில் வசிக்கும், தன் தாய் சுமித்ராவுடன், ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த, 33 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. அதேபோல், மாலாவின் தாய் வீட்டிலும், 2 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.



மொபைல் போன் பறித்த 12 பேர் கைது


திருவல்லிக்கேணி பகுதிகளில், மொபைல் போன் பறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தன. இதுகுறித்த ஏராளமான புகாரை அடுத்து, தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். அதில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த உமாபதி, 32, உட்பட, ஐந்து பேரை, நேற்று முன்தினம் இரவு, போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 20 மொபைல் போன்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.



 மாதவரத்தைச் சேர்ந்தவர், ரமேஷ்குமார், 40; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை, 7:30 மணிக்கு, மாதவரம் பால்பண்ணை சாலையில் நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். மாதவரம் பால்பண்ணை போலீசார், கொடுங்கையூரைச் சேர்ந்த சத்யராஜ், 19, உட்பட மூவரை, நேற்று மதியம், 2:00 மணிக்கு கைது செய்தனர்.



 மொபைல் போன் பறிப்பு தொடர்பாக, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவர்கள் நால்வரை, தனிப்படை போலீசார் நேற்று பிடித்தனர். அவர்களிடமிருந்து, 40 மொபைல் போன்கள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும், 4 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவர்கள் நால்வரும், சிறுவர் சீர்த்திருந்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.




வீட்டில் 25 சவரன் கொள்ளை


கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை பகுதியைச் சேர்ந்தவர், ராஜன், 45; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம், வெளியே சென்றிருந்த இவர், இரவில் வீடு திரும்பினர். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 25 சவரன் நகை, 1.5 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரூபாய், கொள்ளை போனது தெரியவந்தது.கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.



கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது


ஆதம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, நேற்று முன்தினம் இரவு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஆதம்பாக்கம் போலீசார், நேற்று காலை, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு கஞ்சா விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த தீனதயாளன், 28, கருணா, 22, ஆகியோரை கைது செய்த போலீசார், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.காவலாளி மீது தாக்குதல் கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கணேஷ், 68, என்பவர், காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அந்த குடியிருப்புக்கு வந்த இரண்டு பேர், 'கேட்'டை திறக்கச் சொல்லி, கணேஷிடம் தகராறு செய்துள்ளனர். அவர் திறக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள், காவலாளி யை தாக்கினர். காயமடைந்த கணேஷ், ராஜிவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டி.பி.சத்திரம் போலீசார், காவலாளியை தாக்கிய, தனியார், 'டிவி' ஊழியரான வருண், 30, கரண், 27, ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.



'காஸ்' சிலிண்டர்கள், 'அபேஸ்'


மதுரையைச் சேர்ந்தவன், வெங்கடேஷ், 42; சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனியார், 'காஸ் ஏஜென்சி'யில் பணிபுரிந்து, ஆதம்பாக்கம் பகுதியில் சிலிண்டர் வினியோகம் செய்து வந்தான்.ஆறு மாதங்களுக்கு முன் பணியிலிருந்து நீக்கப்பட்ட இவன், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, காலி சிலிண்டர்களை வாங்கி, கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளான். இதுகுறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார், நேற்று முன்தினம், வெங்கடேசை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X