வாரச்சந்தையில் எல்லாம் இல்லை மயம்! அன்னூர் பேரூராட்சிக்கு வெட்கக்கேடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 நவ
2018
23:17

அன்னுார்:ஒவ்வொரு வாரமும், பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் அன்னுார் வாரச்சந்தை பன்றிகள் மேயும் கூடாரமாக மாறி வருகிறது. சந்தையில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், பொருட்கள் வாங்க வருவோர் அவதிப்படுகின்றனர்.அன்னுாரில் வாரந் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. மேட்டுப்பாளையம், காரமடை, புளியம்பட்டி, அவிநாசி உள்ளிட்ட ஊர்களில் இருந்து, 500 வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.


விவசாயிகள் அதிகாலையில் விளைபொருட்களை கொண்டு வந்து, சிறு வியாபாரிகளிடம் விற்றுச் செல்கின்றனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.குறிப்பாக, அன்னுார் வட்டாரத்தில் தங்கி பணிபுரியும், 5,000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் சந்தையில் பொருட்கள் வாங்குகின்றனர். இதன் மேற்கு பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆடுகள் கொண்டு வந்து விற்கப்படுகிறது.வாரச்சந்தை மூலம், அன்னுார் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், வாரச்சந்தை நிலை மோசமாக உள்ளது. ஓதிமலை ரோட்டில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் வாசல்கள் உள்ளன.


இரண்டரை ஏக்கர் பரப்பில் உள்ள சந்தையில் ஒரு இடத்தில் கூட தளம் போடப்படவில்லை.குழிகள் மற்றும் மேடு பள்ளங்களுடன் தரைத்தளம் உள்ளது. மழை, வெயிலுக்கு ஒதுங்க முடிவதில்லை; ஏனெனில், ஒரு இடத்தில் கூட மேற்கூரை இல்லை. குடிநீர் வசதியும் கிடையாது. மின் விளக்கும் குறைவாகவே உள்ளது. சந்தையின் மேற்கு பகுதியில் ஏராளமான பன்றிகள் உலா வருகின்றன.


பொதுமக்கள் கூறுகையில், 'வாரச்சந்தையில் காய்கறி விலை குறைவாக கிடைக்கிறது. சிறுதானியங்கள் தரமாக கிடைக்கிறது என்பதற்காக வருகிறோம். அடிப்படை வசதி இல்லாததால், சந்தைக்கு வரவே அச்சமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம், தரைத்தளத்தில் கான்கிரீட் தரைத்தளம் அமைத்து விளக்கு, குடிநீர், மேற்கூரை வசதிகள் செய்து தர வேண்டும்' என்றனர்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X