வருத்தம்: தலைமைச் செயலகத்திலேயே தமிழ் இல்லையே: எங்கும் ஆங்கிலம் என்பதால் அறிஞர்கள் வேதனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 டிச
2018
10:27
பதிவு செய்த நாள்
டிச 06,2018 01:34

சென்னை:'தலைமைச் செயலகத்தின் பெயர்ப்பலகைகள் மற்றும் கடிதங்களிலேயே, தமிழ் மொழி இடம்பெறாதது வேதனை அளிக்கிறது' என, தமிழ் அறிஞர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழில் இடம்பெற வேண்டும்.உத்தரவு தேவையானால், தமிழின் எழுத்து அளவை விட சிறிதாக, ஆங்கிலத்தில் பெயர் இடம்பெறலாம் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, பல ஆண்டுகள் ஆகி விட்டன.ஆனால் அதை, தனியார் நிறுவனங்கள் மீறி வந்த நிலையில், தற்போது தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, தமிழ் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளதை, அறிய முடிகிறது.ஆங்கில மயம்சென்னை, தமிழக அரசின் தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ளது, நாமக்கல் மாளிகை. இங்கு, அரசு துறை செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. 10 மாடி கட்டடத்தில், எங்கும் தமிழ் சொற்களே இல்லை எனும் அளவிற்கு, அனைத்திலும் ஆங்கிலமே இடம் பெற்று உள்ளன.இதுகுறித்து, தமிழ் அறிஞர்கள் கூறியதாவது:தமிழகத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம், 1947 - 15 மற்றும், 1958ம் ஆண்டு, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம், 42 பி ஆகியவற்றின் படி, நிறுவனத்தின் பெயர் பலகைகள், தமிழில் இருக்க வேண்டும்.ஆங்கிலத்திலோ, பிற மொழியிலோ, பெயர்ப்பலகை எழுதும் அவசியம் ஏற்பட்டால், தமிழ், ஆங்கிலம், பிறமொழி என, முறையே, 5 : 3 : 2 என்ற அளவில், எழுத்து அளவு இருக்க வேண்டும் என, விதி உள்ளது.அதிர்ச்சிஇதை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை கண்டுகொள்வதில்லை.இதனால், தமிழகத்தில் உள்ள, 50 சதவீத வணிக நிறுவனங்களில், ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரிடம், நாங்கள் புகார் அளித்தோம்.இந்நிலையில், தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது, அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும், அங்கிருந்து அனுப்பப்படும் அறிக்கை மற்றும் கடிதங்களும், ஆங்கிலத்திலேயே உள்ளன.நம் தாய் மொழியை புறக்கணித்து, பிற மொழிக்கு, நம் அரசு அக்கறை காட்டுகிறதோ... என, சந்தேகம் எழுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, தலைமை செயலக அதிகாரிகள் கூறியதாவது:தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்கள், அவர்களின் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களிடம், சட்டத்தை எடுத்துக் கூறி, ஒரு மாதத்திற்குள், தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.பாராட்டுதமிழில், பெயர்ப்பலகை வைத்த கடை உரிமையாளருக்கு, பாராட்டு பத்திரங்களை வழங்கி வருகிறோம்.தலைமை செயலகத்தில், தற்போது புதிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விரைவில், தமிழிலும் பெயர் பலகை வைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathy - chennai,இந்தியா
06-டிச-201817:03:34 IST Report Abuse
sathy தமிழ் மொழியை போற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கு
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
06-டிச-201814:41:58 IST Report Abuse
J.Isaac தமிழர்களே அங்கு பணிபுரியவில்லை என எண்ண தோன்றுகிறது. பரிதாபம்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
06-டிச-201811:09:39 IST Report Abuse
Manian அதான் நாங்க ஜனங்க கிடடே மாமூல் வாங்கிக்கொள்ளும் போது தமிழலெதானே பேசுகிறோம். அது போதாதா? அவங்க கிடடே "கிவ் மீ பைவ் ஹண்ட்ரட் நியூ நோட்டு " என்கிற பேசுருகிரோம்? அப்போ ஆயிரக்கனான பேர்களிடத்தில் தமிழ் பேசறது ஜாஸ்தியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X