டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை , மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

07 டிச
2018
01:01
பதிவு செய்த நாள்
டிச 07,2018 00:50

சென்னை: தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது.சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, சென்ட்ரல் வரையும், விமான நிலையத்தில் இருந்து, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.


டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையே, மெட்ரோ ரயில் பாதை பணி முடிந்து, டீசல் இன்ஜின் சோதனை நடத்தப்பட்டு வந்தது.இந்த பாதையில் மின்சார பணி, சிக்னல் அமைக்கும் பணி முழுவதுமாக முடிந்துள்ளது. நிலைய கட்டுமான பணிகளில், சுரங்க நிலையத்தில் இருந்து, பயணியர் வெளியேறும் வழிகளில், 10 சதவீத பணிகள் மீதமுள்ளன.அனைத்து பணிகளையும், ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளன. இந்நிலையில், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., -வண்ணாரப்பேட்டை இடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம், நேற்று துவங்கியது. ஜனவரி முதல் வாரம் வரை, சோதனை ஓட்டம் நடக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


முன்னதாக, வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ்., இடையே, ரயில் நிலைய கட்டுமான பணிகளை, தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் நேற்று காலை ஆய்வு செய்தார்.சோதனை ஓட்டம் நடத்த இருந்த ரயிலில் ஏறியும், அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர், பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X