'அம்மா' உணவகத்தை இடிக்க எதிர்ப்பு, அதிர்ச்சி அளித்தார் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:51

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி, ஈஞ்சம்பாக்கத்தில், நீர்நிலையில் கட்டிய அம்மா உணவகத்தை இடிக்க வந்த அதிகாரிகளிடம், சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில், 160 ஏக்கர் பரப்பளவில், நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு இடம் உள்ளது.இதில், 1,500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த நீர்நிலை இடத்தில், 'அம்மா' உணவகம் மற்றும் பொது கழிப்பறை கட்டப்பட்டு உள்ளன.பெத்தேல் நகரில் உள்ள நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.அதே நீர்நிலையில், அம்மா உணவகம் கட்டியுள்ளதாக, ஆக்கிரமிப்பாளர்கள் முறையிட்டனர்.இதையடுத்து, டிச., 17க்குள், அம்மா உணவகத்தை இடித்து, மாநகராட்சி முன்மாதிரியாக இருக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அம்மா உணவகத்தை இடிக்க சென்றனர்.உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த பகுதி மக்கள், கையில் தட்டுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போராட்டத்தில் பங்கேற்ற, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், 'அம்மா உணவகத்தை இடிக்கக்கூடாது' என, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.செய்வதறியாது திகைத்த அதிகாரிகள், இடிக்கும் முடிவை கைவிட்டு திரும்பினர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தை முடித்த அப்பகுதி மக்கள், கொண்டு வந்த தட்டில்,அம்மா உணவகத்தில், இட்லி, பொங்கல் வாங்கி சாப்பிட்டு கலைந்தனர்.அ.தி.மு.க., அரசின் திட்டமான அம்மா உணகத்தை இடிக்கவிடாமல், தி.மு.க., - எம்.எல்.ஏ., தடுத்த சம்பவம், அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X