புதுகையில் பலாப்பழம் சீஸன் துவக்கம்:நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 மே
2011
01:37

புதுக்கோட்டை: புதுக்கோட் டை மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் களைகட்டியுள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி, திருவரங்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் முக்கிய பழப்பயிராக இன்றளவும் பலாப்பழம் நீடித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள மண்வளம் பலா மரம் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளதால் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்திவருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக உள்ளதால் இவற்றை வாங்கி செல்வதில் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் முடிய பலாப்பழம் அறுவடையாவது வழக்கம். தற்போது பலாப்பழம் சீசன் களைகட்டியுள்ள நிலையில் கிராமப்பகுதிகளில் இயங்கி வரும் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகளில் ஏராளமான பலாப்பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. ஆலங்குடி, கீரமங்கலம், கொ த்தமங்கலம், வடகாடு பகுதிகளில் உள்ள சந்தைகளில் மட்டும் நாள்தோறும் இரண்டு டன் முதல் 200 டன் பலாப்பழங்கள் வரை விற்பனையாகிறது. இவை மா வட்டத்தின் இதரப்பகுதிகள் மட்டுமின்றி சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச் சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக விற்பனைக்காக வாங்கிச் செல்லப்படுகிறது. இத ற்காக அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். பலாப்பழங்களை வாங்கி கு விப்பதில் வியாபாரிகளுக்கு இ டையே கடும் போட்டி நிலவுவதால் இதன் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 20 ரூபாய்க்கு விற்பனையான ந டுத்தர பலாப்பழம் ஒன்று இந்த ஆண்டு 60 ரூபாயாக எகிறியுள்ளது. பெரிய பழங்கள் ஒவ்வொ ன்றும் 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எதிர்பார்த்ததைவிட நல்ல விலை கிடைப்பதால் பலாப்பழ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பலாப்பழத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் மாவட்டத்தில் இதன் உற்பத்தி மேல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான ஒட்டு ரக பலாச் செடிகளை மானிய விலையில் வழங்கவும் தோட்டக்கலைத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.