thanjai district | குடந்தையில் அட்ஷய திருதியை முன்னிட்டு12 வைணவ ஸ்தலங்களில் கருட சேவை Dinamalar
குடந்தையில் அட்ஷய திருதியை முன்னிட்டு12 வைணவ ஸ்தலங்களில் கருட சேவை
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

06 மே
2011
01:38

கும்பகோணம்: கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் பெருமாள்கள் அருள்பாலிக்கும் 12 கருட சேவை இன்று நடக்கிறது.கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று 12 கருட சேவையாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப்பின் வரும் மூன்றாவது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களில் இருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு பெரிய தெருவில் காசிக்கடைகளுக்கு எதிரில் 12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.அட்சய திருதியையன்று எந்த செயலை செய்தாலும் வெற்றி கிட்டும். எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்துக்கு வரவழைக்கும் நாள் என்பது புராணம் கூறும் ஐதீகம். குலேசன் குபேரன் ஆனதும் இந்த தினத்தில் தான். எனவே, இந்த தினத்தில் தங்கம், வீடு, மனை, துணிகள் என எது வாங்கினாலும் இல்லத்தில் தங்கும் என்பது பொதுமக்களிடையே சமீப காலமாக அதிகரித்து வரும் நம்பிக்கையாகும்.அதன்படி, அட்சய திருதியை நாளான இன்று ஆறாம் தேதி கும்பகோணம் பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, ஆதிவராகபெருமாள், பாட்ராச்சாரியார் தெரு கிருஷ்ண ஸ்வாமி, சோலையப்ப தெரு ராமஸ்வாமி, மல்லுகசெட்டித் தெரு சந்தானகோபாலகிருஷ்ணன்.கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபாலசுவாமி, மேலக்காவேரி வரதராஜபெருமாள், அஹோபிலமடம் லஷ்மி நரசிம்மஸ்வாமி ஆகிய 12 கோவில்களில் இருந்து பெருமாள் ஸ்வாமிகள் கருட வாகனத்திலும், இந்த ஸ்வாமிகளுக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை காசிக்கடை தர்ம வர்த்தகர்கள் சங்கத்தினர் செய்துள்ளனர். கருட சேவை தினத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெரிய தெருவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, கும்பகோணம் டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


 

மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X