வேன்மோதி மாணவன் இறந்த விவகாரம் ஆலங்குடியில் உறவினர்கள் சாலைமறியல்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஆக
2011
01:20

ஆலங்குடி: ஆலங்குடியில் பள்ளி வேன் மோதி மாணவன் இறந்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர், உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீழாத்தூரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். அரசு பஸ் டிரைவரான இவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் கதிரேசன் (6). கதிரேசன் கீழாத்தூர் அருகே வெள்ளாகுளத்தில் தூய வளனார் சேவியர் ஆங்கிலப்பள்ளியில் (இன்னஸன் பள்ளி) முதல் வகுப்பு படித்தார்.கடந்த இரு நாட்களுக்கு முன் மதியம் பள்ளி முடிந்து, பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகேந்திரா வேனில் வந்து வீட்டு வாசலில் கதிரேசன் இறங்கினான். அவனை இறக்கி விட்ட வேன் டிரைவர், யாரிடேமா பேசிக் கொண்டு வேகமாக வேனை எடுத்தார். எதேச்சையாக வேனின் முன்புறம் வந்த கதிரேசன், வேனின் முன்புற டயர் ஏறி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியில் இருந்து வந்த குழந்தையை பார்க்க ஆவலுடன் வந்த தாய் ராஜேஸ்வரி, சடலமாக கிடந்த தனது மகனை கண்டு கதறியழுதார். வடகாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வெள்ளாங்குளத்தை சேர்ந்த வேன் டிரைவர் சுந்தரத்தை (36) தேடி வருகின்றனர். நேற்று காலை பள்ளி நிர்வாகத்தை கண்டித்து இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வடகாடு முக்கு என்ற இடத்தில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய சாலை மறியல் 11 மணி வரை நீடித்தது. ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் பரமசிவம், "உடனடியாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்ததையடுத்து, சாலைமறியல் கைவிடப்பட்டது.இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ""விபத்து ஏற்படுத்திய வேன் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமானது கிடையாது. ஒப்பந்த அடிப்படையில் அந்த வேன் ஓடுகிறது,'' என்றனர்.

 

Advertisement
மேலும் புதுக்கோட்டை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.