கரூர்: கரூர் மாவட்ட ஓய்வூதியர்கள் சங்க மாதக்கூட்டம் கோவிந்தராஜ் தலைமையில் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெத்தேல் இல்லத்தில் நடந்தது. கூட்டத்தில் புதியதாக வரும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மருத்துவ செலவு ஈடுகட்டும் திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்தால் கருவூல அலுவலர்கள் அனுமதி அளிப்பது, மத்திய அரசு போல் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவப்படி 300 ரூபாய் அளித்தல், பசுமை வீடு கட்டிடம் திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒதுக்கீடு செய்தல், மருத்துவ செலவு ஈடுகட்டும் திட்டத்தின் உச்சவரம்பு தொகையை 2 லட்சம் ரூபாயாகவும், குடும்ப பாதுகாப்பு நிதியை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுச்செயலாளர் சிவசங்கரன், நிர்வாகிகள் எட்வி ன், பர்னபாஸ், ராமசாமி, வடமலை ராஜி, ஒருங்கிணை ப்பாளர் சத்திய நாகராசன் உள்பட பலர் பங்கேற்றனர்.