பள்ளி பஸ்களை தடுக்கும் டி.எஸ்.பி.,
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 செப்
2011
01:49

ஈரோடு: ஈரோடு ஏ.ஆர்., குடியிருப்புக்குள் பள்ளி வாகனங்களை அனுமதிக்குமாறு, போலீஸார் குடும்பத்தினர் கோரியுள்ளனர். ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் தமிழக அரசு ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீஸாருக்கு குடியிருப்பு கட்டித் தரப்பட்டுள்ளது. டி.எஸ்.பி.,க்கள் நான்கு பேர், இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 120 ஆயுதப்படை போலீஸார் வசிக்கின்றனர். இவர்களது குழந்தைகள், ஈரோடு, பவானி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களை அழைத்துச் செல்ல, அந்தந்த பள்ளி பஸ்கள், போலீஸ் குடியிருப்புக்கு வருகின்றன. இங்கு வசிக்கும் டி.எஸ்.பி., ராஜ், குடியிருப்பு பகுதிக்குள், பள்ளி பஸ்கள் வருவதை தடுப்பதாக, போலீஸாரே புகார் கூறுகின்றனர்.


ஏ.ஆர்., குடியிருப்பு பகுதியில் வசிக்கும் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கூறியதாவது: இக்குடியிருப்பில், போக்குவரத்து போலீஸார் வசிக்க அனுமதியில்லை. இருப்பினும், போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜ் என்பவர் வசிக்கிறார். இப்பகுதியில் இருந்து போலீஸாரின் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு படிக்க செல்கின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்ல, காலை 7.45 மணி முதல் 9 மணி வரை, எட்டுக்கும் மேற்பட்ட பள்ளி பஸ்கள் குடியிருப்புக்குள் வந்து குழந்தைகளை அழைத்து செல்கின்றன.


போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜ் தன்னிச்சையாக செயல்பட்டு, ஏ.ஆர்., குடியிருப்புக்குள், பள்ளி பஸ் வரக்கூடாது என, பஸ் டிரைவர்களை மிரட்டுகிறார். இதனால், பள்ளி பஸ்கள் உள்ளே வராமல், குடியிருப்பு வெளியே நின்றபடி செல்கின்றன. இப்பகுதி குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, எஸ்.பி.,யிடம் புகார் கூறவுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X