ராயபுரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக்க. கோரிக்கை சென்ட்ரல் எழும்பூரில் நெரிசல் குறைவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

16 நவ
2011
06:09
பதிவு செய்த நாள்
நவ 15,2011 23:59

சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை விட அதிகளவு இடத்தையும், சாலை உள்ளிட்ட மற்ற வசதிகளையும் பெற்று இருக்கும் ராயபுரம் ரயில் நிலையத்தை, மூன்றாவது முனையமாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தென்னகத்தின் முதல் ரயில் பயணம், 1856ல் ஜூன் மாதம் ராயபுரத்தில் இருந்து கிளம்பியது. அன்று முதல் 17 ஆண்டுகள் ராயபுரமே, சென்னையின் ஒரே ரயில் நிலையமாக செயல்பட்டு வந்தது. 1873ல் சென்ட்ரல் ரயில் நிலையம் துவக்கப்பட்ட பின், வடக்கே செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இருந்தும், தெற்கே செல்லும் ரயில்கள் ராயபுரத்திலிருந்தும் பயணித்தன.இந்நிலையில், துறைமுகத்தால் ரயில் நிலையத்துக்கு சரக்கு வரத்து அதிகமானது. அதனால் தெற்கே செல்லும் ரயில்களுக்காக, 1907ல் எழும்பூர் ரயில் நிலையம் துவக்கப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு ரயில்கள் ராயபுரத்தை விட்டு பிரிந்ததாலும், சரக்குப் பெட்டக முனையமாக கொருக்குப்பேட்டை உருவானதாலும் ராயபுரம் ரயில் நிலையம் பயனில்லாமல் போனது.அமைச்சரின் அறிவிப்பு காற்றோடு போச்சுமொத்தம் 72 ஏக்கர் இடவசதி கொண்ட ராயபுரம் ரயில் நிலையத்தின் சில பகுதிகள், 2006ல் சிமென்ட் மற்றும் உர கிடங்குகளுக்காக தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டது. இதனை கண்டித்து நடந்த போராட்டத்தின் விளைவாக, ராயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் பழுது பார்க்கும் பணிமனை அமைக்க, 2007ல் 15.5 ரூபாய் கோடி ஒதுக்கப்பட்டது.அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, ""வடசென்னை வாசிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, வடக்கே செல்லும் ரயில்கள், ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்'' என அறிவித்தார். இந்த அறிவிப்பு, இன்றுவரை அறிவிப்பாகவே இருந்து வருகிறது.தாம்பரத்திற்கு மாற்ற திட்டம்?ராயபுரத்தில் ஏற்பட்ட நெரிசலை காரணம் காட்டி, எப்படி எழும்பூர் ரயில் நிலையம் துவக்கப்பட்டதோ, அதே போல் இப்போது எழும்பூர் ரயில் நிலைய நெரிசலை காரணம் காட்டி, மூன்றாவது முனையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மூன்றாவது முனையத்தை தாம்பரத்தில் அமைப்பது குறித்து ஆலோசனைகள் நடந்துள்ளன. ஆனால், இது குறித்து இறுதியான முடிவு எதையும் ரயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இந்நிலையில், ராயபுரம் ரயில்நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதற்காக "தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம்,' என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் நோக்கம் குறித்து விளக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளான டாக்டர்.ஜெயச்சந்திரன், போஸ், மாரிமுத்து ஆகியோர், "" ராயபுரத்தில் மூன்றாவது முனையத்தை உருவாக்கினால், தற்போது எழும்பூரிலிருந்து வடக்கே இயக்கப்படும் ரயில்களை ராயபுரத்திலிருந்து இயக்கலாம். இதனால் சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் நெரிசல் குறையும். எழும்பூரிலிருந்து வடக்கே செல்லும் தாதர், கயா, கவுஹாத்தி, காக்கிநாடா உள்ளிட்ட ஏழு ரயில்கள் ராயபுரம் வழியாக தான் செல்கின்றன. அதனை ராயபுரத்திலிருந்தே இயக்கலாம்'' என்றனர்.நடைபயண போராட்டம்மேலும், ""சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் இடையே 1.5 கிலோ மீட்டர் தொலைவு தான். இரண்டுக்கும் தொடர்பே இல்லை. ஆனால், ராயபுரத்திலிருந்து சென்ட்ரலுக்கு 4.5 கிலோ மீட்டரும், எழும்பூருக்கு ஆறு கிலோ மீட்டரும் இடைவெளி கொண்டுள்ளது. இரண்டுக்கும் ராயபுரத்தில் இணைப்பு உள்ளது. ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றக்கோரி, வருகிற 22ந் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் நடை பயண போராட்டத்தை நடத்தவுள்ளோம். ராயபுரம் ரயில் முனையத்துக்கு தேவையான நிதியாக, ஒவ்வொரு தென்னக ரயில் பயணிகளிடமும் 100 ரூபாய் வசூலித்து ரயில்வே துறைக்கு தருவதெனவும் முடிவு எடுத்துள்ளோம்'' என்றனர்.

எஸ்.சந்திரசேகர்

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரராமன் - tiruninravur,இந்தியா
16-நவ-201109:11:26 IST Report Abuse
சுந்தரராமன் ராயபுரத்தை மூன்றாவது முனையமாக ஆக்குவதில் தெற்கு ரயில்வேக்கு பல சிறப்புகள் ஏற்படும். ராயபுரம் தாம்பரத்தைபோல் அல்லாமல் சென்னை மாநகராட்சியில் இடம் பெற்றுள்ளது. பெரும் வணிக மையம். அது பெரும் நிலப்பரப்பு கொண்ட பகுதி. வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு ரயில்களும் அங்கே நிறுத்தப்படுவதால் மாறி செல்லும் பயணிகளுக்கு எந்த அசௌகரியமும் இருக்காது. புராதனமான கட்டிடம் கொண்ட நிலையம் என்பதால் அதை பராமரிப்பதும் நம் கடமை ஆகிறது. இது மூன்றாவது முனையம் அமைப்பதன் மூலம் எளிமையாக செய்யலாம். வடக்கு சென்னை மேம்பட ஏதுவாக இருக்கும். சென்னை மாநகர் எல்லைக்குள் நிலக்கரி போன்ற மாசு பொருட்கள் கையாளுவது நிறுத்தப்பட்டு அவை என்னூருக்கு மாற்றம் பெரும். பீச்சிலிருந்து இயக்கப்படும் மின்சார ரயிலும் ராயபுரத்திற்கு மாற்றப்படுவதால் பீச்சில் இருக்கும் இட நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும். மக்கள் எளிதாக அரக்கோணம் மற்றும் தாம்பரம் பகுதிக்கு மாறி செல்ல முடியும். தாம்பரத்தில் ஏற்கெனெவே இட நெருக்கடி. பேருந்து, ஆட்டோ, டாக்சி, மின்சார ரயில் போன்றவற்றிலிருந்துதான் மக்கள் தொலை தூர ரயில்களை பிடிக்க முடியும். இவற்றிலிருந்து இறங்கி மூட்டை முடிச்சுகளுடன் ரயில்களில் ஏறுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. இது மேலும் நெருக்கடியை தரும். தவிர தாம்பரம் சென்னைக்கு வெகு தொலைவில் உள்ளது. அங்கே ரயில்களை நிறுத்தலாமே ஒழிய முனையம் அமைப்பது பயனற்ற வேலை.
Rate this:
Share this comment
Cancel
raviparthasarathy - srirangam,இந்தியா
16-நவ-201100:17:38 IST Report Abuse
raviparthasarathy தாம்பரத்தை தென் பகுதியின் டெர்மினல் ஆக்குவதை விட எழும்பூரில் இருந்து வடக்கு மற்றும் மேற்கு பக்கம் செல்லும் ரயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கினால் எழும்பூர் நெரிசலும் குறையும் தென் சென்னையில் இருந்து வடக்கு மற்றும் மேற்கு நோக்கி செல்லும் பயணிகளுக்கும் உபயோகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X