Advertisement
பொள்ளாச்சி கலாசு தொழிலாளர்கள் வலியுறுத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 டிச
2011
23:05

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவிலுள்ள கலாசு தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டுமென்று, கலாசு தொழிலாளர்கள் தொழில்வர்த்தக சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகர அனைத்து பாரம் தூக்கும் மற்றும் கலாசு தொழிலாளர்கள், பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபைக்கு அனுப்பியுள்ள மனு:
பொள்ளாச்சி நகரம் மற்றும் தாலுகா முழுவதும் சேர்த்து சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கலாசு தொழிலாளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சியிலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் வரும் பொருட்களை ஏற்றி, இறக்கும் பணியை செய்து வருகிறோம்.
கலாசு மற்றும் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை கூலி உயர்வை தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க நிர்வாகிகளும், வியாபாரிகள் சார்பில் தொழில் வர்த்தக சபை நிர்வாகிகளும் கலந்து பேசி கூலி உயர்வை அறிவிப்பது வழக்கம்.
கூலி உயர்வு கடந்த 2008ம் ஆண்டு உடன்பாடு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதத்தோடு மூன்று ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை துவங்காமல் வர்த்தக நிறுவனங்கள் இழுத்தடிக்கும் நோக்கத்தில் செயல்
படுகின்றன.
கடந்த முறை கூலி உயர்வுக்காக கலாசு மற்றும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியபின், கூலி உயர்வு செய்யப்பட்டது.
தற்போதும் அதேபோன்று கூலி உயர்வு செய்ய இழுத்தடிக்காமல் பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்.
அனைத்து வீட்டு உபயோக பொருட்கள், உணவு பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையில், கூலி உயர்வு பேச்சுவார்த்தையை துவங்கி, கூலி உயர்வை அறிவிக்க
வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.