ஒரு மனைக்கு ரூ.6.40 லட்சம் வசூலிக்க திட்டம்: கீழ்கட்டளை நிலப்பிரச்னைக்கு புதிய தீர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

15 மே
2012
06:05
பதிவு செய்த நாள்
மே 15,2012 02:58

கீழ்கட்டளை பகுதியில் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களை, ஒரு மனைக்கு, 6.40 லட்ச ரூபாய் வீதம் வசூலித்து வரன்முறைப்படுத்த, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது.


பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்கட்டளையில் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக, 1990ம் ஆண்டு, 56.57 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து, நில உரிமையாளர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் இடைக்கால தடை பெற்றனர்.


இழப்பீடு நிர்ணயம்
இருப்பினும், இந்நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து, வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக 53 லட்ச ரூபாயை பூந்தமல்லி கோர்ட்டில் அதிகாரிகள் செலுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், 1999ம் ஆண்டு, ஐகோர்ட்டின் வெவ்வேறு
நீதிபதிகள் தனித்தனியாக வழங்கிய தீர்ப்புகளில், வீட்டு வசதி வாரிய அறிவிப்பு
செல்லாது என அறிவித்தனர்.இதன் பிறகும், கீழ்கட்டளை மக்களுக்கும், வீட்டு வசதி வாரியத்துக்கும் இடையிலான சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.


வாரியம் நடவடிக்கை
இது தொடர்பாக வீட்டு வசதி வாரியம், 2006ல் தாக்கல் செய்த ஒரு மேல்முறையீட்டு வழக்கில் தங்களுக்கு கிடைத்த சாதகமான தீர்ப்பை அடுத்து, மற்ற வழக்குகளுக்கும் இதை உறுதி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக, 1993ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, 2011ம் ஆண்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


'தினமலர்' செய்தி எதிரொலி
வாரியத்தின் இந்நடவடிக்கையால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இது தொடர்பான விரிவான செய்தியை, ஆகஸ்ட் 3ம் தேதி, "தினமலர்' வெளியிட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளை வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தன்சிங் எம்.எல்.ஏ., ஆகியோர், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் சென்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு செய்தனர்.புதிய முடிவு
இந்த ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் அடிப்படையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வீட்டு வசதி வாரிய கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்:
கீழ்கட்டளையில் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட, 56.57 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரத்தில், இனம் 3ல் வரும் நிலங்களுக்கு செலவு செய்யப்பட்ட தீர்வு தொகைக்கு கூட்டு வட்டியின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட, 3.20 லட்சத்தை இரண்டு மடங்காக அதாவது மனை ஒன்றுக்கு, 6.40 லட்ச ரூபாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலித்து ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்ய, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி ஒப்புதல் பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பான கோப்புகள், வீட்டு வசதி மற்றும் நகர் ஊரமைப்புத் துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sasee n dran - chennai,இந்தியா
21-அக்-201206:48:35 IST Report Abuse
sasee n dran இன்று கீழ்கட்டளையில் மனை 60 லட்சம் , அரசு 30 லட்சம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலித்து ஆக்கிரமிப்புகளை வரைமுறை செய்யலாம் .
Rate this:
Share this comment
Cancel
ச.குமரகுரு paran - nowatU.S.A.SUNNYVALE,இந்தியா
20-ஜூன்-201201:40:53 IST Report Abuse
ச.குமரகுரு paran court may be consider, any compensation based on land,look at the guideline value.please
Rate this:
Share this comment
Cancel
sundar iyer - keelkattalai,chennai,இந்தியா
13-ஜூன்-201207:43:36 IST Report Abuse
sundar iyer இந்த இடத்தில் நிலம் ஒரு கிரவுண்டு கிட்டத்தட்ட எண்பது இலட்சம் வரை போகிறது. ஆறு லட்சத்து நாற்பதாயிரம் என்பது மிகவும் நியாமான ஒன்று தான்.
Rate this:
Share this comment
Cancel
karthik - keelkatalai,இந்தியா
17-மே-201209:28:31 IST Report Abuse
karthik i request our Honorable Chief Minister to solve this problem without money.
Rate this:
Share this comment
Cancel
ராஜா - chennai,இந்தியா
16-மே-201214:28:01 IST Report Abuse
ராஜா இந்த நிலங்கள் எங்கள் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் சொத்துகலாகும்........ இதை நாங்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை அரசே நீங்கள் தான் ஆக்கிரமிப்பு செய்து இருக்ககிறீர்கள் அது நினைவு இருக்கட்டும்...... இது என்ன ஆங்கிலேயன் அரசு ஆட்சி போன்று இருக்கு........ தமிழ் நாட்டுல சரி செய்ய வேண்டிய விஷயங்கள் பல இருக்கு அதை போய் பாருங்கப்பா.......... நில மோசடின்னு............. எவ்வளவோ வழக்குகள் போட்டுக்கிட்டு இருக்கிங்க....... இதை என்னனு சொல்லுறது............. TNHB இன் மீது என்னனு வழக்கு போடுவது .... நில மோசடின்னுனா....அரசே இப்படி செய்வது சரியா..தனக்கு ஒரு நியாயம் ஊருக்கு நியாயமா .......... இதற்கு பேருதான் அரசுவழில் சட்டபூர்வமாக (அதாவது அரசு வழில், உள் நோக்குடன் சொல்லப்போனால் சட்டத்திருக்கு புறம்பாக - ஆனால் அரசுக்கு நன்மை தரும் வகையில்) செய்வதா..............
Rate this:
Share this comment
Cancel
மகி - ChennaiKeelkattali,இந்தியா
16-மே-201211:34:59 IST Report Abuse
மகி ஒரு மனைக்கு ரூ.6.40 லட்சம் வசூலிக்க திட்டம்: கீழ்கட்டளை நிலப்பிரச்னைக்கு புதிய தீர்வு கண்டிப்பாக இது எப்படி தீர்வாகும்... 6,40,000 என்பது அரசுக்கு மிக மிக மிக மிக மிக மிக மிகச்சிறிய சிறிய தொகைய இருக்கலாம் ஆனால் இந்த தொகை இமயம் போன்றது எங்களை போன்ற ஏழைகளுக்கு....... அதுஹும் எங்கள் நிலத்துக்கு நாங்கள் ஏன் இத்தொகையை செலுத்த வேண்டும். அரசாங்கம் எங்களக்கு இந்த நிலத்துக்கு பதிலாக பணமாக கொடுத்தால் சில ஆயரங்கலே...... என்ன கொடுமை சார் இது........
Rate this:
Share this comment
Cancel
மகேஷ் - Chennai,இந்தியா
16-மே-201211:23:26 IST Report Abuse
மகேஷ் இது என்னாக ஆநியாயமாக இருக்கு. எங்க சொத்து நாங்க கஷ்டப்பட்டு காசு கொடுத்து வாங்கினது. அரசாங்கம் எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா... ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!........ அரசாங்கம் எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு எங்கள் நிலத்துக்கு எங்களிடமே பணத்தை கேட்பதா இது எந்த விதத்தில் நியாயம் ?. அரசே உங்களால் எங்களுக்கு உதவிசெய்ய முடியவில்லை என்றாலும் பரவா இல்லை.... உபத்ரம் செய்யாதீர் ........ தினமலர் பத்திரிக்கையாளர்களே குறித்து கொள்ளுங்கள்... கடந்த 25 வருடமாக இந்த தொல்லைகளை / அநீதியை கீழ்கட்டளை மக்களுக்கு தமிழக அரசு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.... கீழ்கட்டளைஇன் 80% நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்து செய்து கொண்டு வருகிறது..... ஆனால் அரசு கூறுகிறது எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று!... இதை யார் தட்டி கேட்பது.. தினமலரே நீங்கலாவது............????????????????
Rate this:
Share this comment
Cancel
v.thatchan - Chennai,இந்தியா
15-மே-201214:46:01 IST Report Abuse
v.thatchan Sir The proposal sent by TNHB for collecting compensation amt of Rs.6.40 lakhs from the residents of keelkatalai to regularise.the ownership. being the high handness action of TNHB . The TNHB has issued notification without consent of the residents.When TNHB is very particular in charging compensation, why should not apply the same yardstick to the allottee of TNHB plots under privilege category in chennai city and surrounding areas far below the market rate. Please reconsider the issue and allow the habitation without any compensation
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.