district news | ஊழியர் போராட்டம் வாபஸ் ஆனபோதும் குப்பையால் தவிக்கிறது மூன்று மண்டலம் Dinamalar
Advertisement
ஊழியர் போராட்டம் வாபஸ் ஆனபோதும் குப்பையால் தவிக்கிறது மூன்று மண்டலம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
23:56

சென்னை: சம்பள உயர்வு குறித்து, 19ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என, ராம்கி நிர்வாகம் உறுதியளித்ததால், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர்.

சென்னை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மூன்று மண்டலங்களிலும், குப்பை அகற்றும் பணியை, செய்து வரும் ராம்கி நிறுவனம், ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்ததால் நேற்று முன்தினம், குப்பை வண்டி டிரைவர்கள், ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மூன்று மண்டலங்களிலும், குப்பை அகற்றும் பணி பாதித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன், ராம்கி நிர்வாகம், பேச்சுவார்த்தை நடத்தியது. 19ம் தேதி, மேயர் சைதை துரைசாமி முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளம் உயர்த்தி வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என, உறுதியளித்தது.

இதையடுத்து, ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவில், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். மூன்று மண்டலங்களிலும், நேற்று வழக்கம்போல் பணிகள் நடந்தாலும், முதல் நாளில் தேங்கிய குப்பையோடு, நேற்றும் பெருமளவு குப்பை சேர்ந்ததால், முற்றிலும் அகற்ற முடியவில்லை. இதனால், பெரும்பாலான இடங்களில், குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தன. "நிலைமை ஓரிரு நாளில் சரியாகிவிடும்' என நிர்வாகம் தெரிவித்துள்ளது. "குப்பை அகற்றும் பணியை சரியாக செய்யாமல், அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பதைத் தவிரவேறு வழியில்லை' என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.