district news | முதல் பட்டதாரி சான்றிதழ் பெறமுடியாமல் அவதி Dinamalar
Advertisement
முதல் பட்டதாரி சான்றிதழ் பெறமுடியாமல் அவதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2012
00:02

தாம்பரம்: தாம்பரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பூட்டியே கிடப்பதால், முதல் பட்டதாரி சான்றிதழ் பெறமுடியாமல், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

சான்றிதழ்கள்கோடை விடுமுறைக்குப்பின், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை புதிதாக சேர்க்கவும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் சேர்க்கவும், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. ஐந்தாம் வகுப்பில் இருந்து 6 வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு, அந்தந்தப் பள்ளியிலேயே ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

ஆனால், இது சம்பந்தமாக, பள்ளிகளுக்கு தெளிவான அறிவுரை வழங்கப்படவில்லை. இதனால், இந்த சான்றிதழ்களைப் பெற, கிராம நிர்வாக மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு பெற்றோர் நடையாய் நடக்கின்றனர். சான்றிதழ்கள் வழங்குவதில் அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர்.

இதேபோல், ஒரு குடும்பத்தில், முதன் முதலாக கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், முதல் பட்டதாரி சான்றிதழை சமர்ப்பித்தால், கட்டணத்தில் அவர்களுக்கு சலுகை உண்டு. இதனால், முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கும், ஏராளமானோர் முயற்சிக்கின்றனர்.

திறப்பில்லைதாம்பரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு, முதல் பட்டதாரி, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் பெற, தினசரி நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அலுவலகம், நேரத்திற்கு திறக்கப்படுவதில்லை. இஷ்டத்திற்கு கண்ட நேரத்தில் திறக்கின்றனர்.

இதனால், சான்றிதழ் பெற முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சில மாணவர்கள், நாள் முழுவதும் அங்கேயே காத்துக் கிடக்கின்றனர். பல மணி நேரம் ஆகியும், அலுவலகம் திறக்கப்படாததால், சான்றிதழ் கிடைக்குமா, கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

சரியாகும்தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் எட்டியப்பனிடம் கேட்டபோது,' டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு, அனுமதிச் சீட்டு வினியோகம் செய்வதற்காக, வருவாய் ஆய்வாளர் தனியார் பள்ளிக்கு சென்றுவிட்டார். இதனால், தான் அலுவலகம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலைமை, சில தினங்களில் சரியாகிவிடும்,' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.