DISTRICT NEWS | இரவில் குடிமையமாக மாறும் பம்மல் திருப்பனந்தாள் ஏரி Dinamalar
Advertisement
இரவில் குடிமையமாக மாறும் பம்மல் திருப்பனந்தாள் ஏரி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
04:05

பல்லாவரம் : கோர்ட் வாசலை மிதித்து, மக்கள் பிரதிநிதிகளிடம் போராடி, நலசங்கம் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியால், சிறந்த மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்ட பம்மல் திருப்பனந்தாள் ஏரி, முறையான பராமரிப்பில்லாமல் தற்போது மீண்டும் சீரழியத் துவங்கியுள்ளது.
ஆக்கிரமிப்பு
பம்மல் நகராட்சியில் பெரிய அளவிலான நீர்நிலைகள் இல்லை. அங்கொன்று, இங்கொன்றுமாக சிறுசிறு குளம், குட்டைகள் மட்டுமே உள்ளன. மூங்கில் ஏரி என்று தற்போது ஒரு நகர் உள்ளது.
முன் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரியாக இருந்த பகுதி தான் மூங்கில் ஏரி. தற்போது ஏரி இருந்த தடம்கூட தெரியவில்லை. அடுத்ததாக திருப்பனந்தாள் ஏரி. இந்த ஏரியும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, சுருங்கியுள்ளது. மொத்த ஏரியும் ஆக்கிரமிப்பதற்கு முன், அப்பகுதி நலச் சங்கங்கள் விழித்துக் கொண்டன.
போராட்டங்கள், கோர்ட்டில் வழக்கு என, பல்வேறு இடையூறு களைக் கடந்து பம்மல், திருப்பனந்தாள் ஏரி ஒரு சிறந்த மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டது. அண்ணா பல்கலைக்
கழகம் வடிவமைத்துக் கொடுத்த ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஏரியில் கழிவுநீர் கலக்காமல், ஏரியின் கரைகளில் குழாய் பதித்து, கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. புல்வெளி, நடைபாதை, மின்விளக்குகள், பாதுகாப்பு வேலி, பாதுகாப்பிற்கு செக்யூரிட்டி என, ஏரி பொலிவுடன் மாற்றப்பட்டது.
தற்போது கூட இந்த ஏரிக்கரையில் 500க்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சி செய்கின்றனர். முன்மாதிரியாக திகழ்ந்து வந்த இந்த ஏரி, சமீபகாலமாக முறையான பராமரிப்பில்லாமல் மீண்டும் சீரழியத் துவங்கியுள்ளது. மொத்தம் உள்ள 24 மின்விளக்குகளில் ஆறு மட்டுமே எரிகிறது. ஏரிக்குள் கழிவுநீர் சகட்டுமேனிக்கு வருகிறது. கால்நடைகள் உலா வருகின்றன.


அவதி
இரவில் குடிமையமாகவும் மாறிவிடுகிறது. இதனால் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள், பாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியுள்ளது. இப்படியே போனால், இன்னும் சில ஆண்டுகளில் திருப்பனந்தாள் ஏரி படுமோசமான நிலைக்கு வந்துவிடும் என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.
பம்மல் நகராட்சி அக்கறை எடுத்து, இருக்கின்ற ஒரே நீர் ஆதாரமான திருப்பனந்தாள் ஏரியை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, "ஏரியில் மின்விளக்குகள் பழுதாகிவிட்டது. சீரமைக்க உள்ளோம். பாதுகாப்பு வேலி சீர்குலைந்துள்ளது. புதிதாக வேலி அமைத்து, இரும்பு கேட் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் கலப்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.