DISTRICT NEWS | சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பதாரர் பிரதிநிதிக்கு தடை Dinamalar
Advertisement
சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பதாரர் பிரதிநிதிக்கு தடை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
03:14

சென்னை : திட்ட அனுமதி தொடர்பாக, விண்ணப்பதாரரின் சார்பில், அவரது பிரதிநிதிகள், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், அதிகாரிகளை சந்திக்க தடை விதிக்கப்பட உள்ளது. திட்ட அனுமதி தாமதத்தை தவிர்க்க, இது @பான்ற, பல்வேறு முக் கிய முடிவுகள் சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளன.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.,) அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அனைத்து விவரங்களையும் சரியாக வழங்கினாலும், முதல் கட்ட ஆய்வு முடிந்து கூடுதல் விவரங்கள், விளக்கம் கேட்கும் பணிகள் துவங்கவே ஆறு மாதம் முதல் எட்டு மாதம் வரை ஆகிறது.
நடவடிக்கை
இதனால் கட்டுமான நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. வீடுகளின் விலையும் அதிகரிகிறது. இதற்கான காரணங்கள் குறித்தும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்க, உறுப்பினர் செயலர் ஆர்.வெங்கடேசன் தலைமையில், உயரதிகாரிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
டூ புதிய திட்டத்துக்கு ஆய்வு பணிகள் முடிந்து, ஒப்புதல் வழங்கும் நிலையில், வளர்ச்சி கட்டணம் செலுத்த, இரண்டு மாத அவகாசம் வழங்கப்படும்
டூ இந்த காலத்துக்குள், வளர்ச்சி கட்டணம், புதிய வரைபடம், சாலை விரிவாக்கத்துக்கான நிலம், திறந்தவெளி நிலம் ஒப்படைப்பு ஆகிய பணிகளை செய்து முடிக்க வேண்டும்
டூ குறிப்பிட்ட காலத்துக்குள், விண்ணப்பதாரர் பணிகளை முடிக்காவிட்டால், 15 நாட்கள் கூடுதல் அவகாசம் தரப்படும்
டூ இதற்குள், விண்ணப்பதாரர் வராவிட்டால், திட்ட அனுமதி கோரும் விண்ணப்பம் திருப்பி அனுப்பப் படும்
டூ இந்த கடிதங்களை, வெவ்வேறு சமயங்களில் அனுப்பும் நடைமுறை உள்ளதால், தேவையின்றி காலதாமதம் ஏற்படுகிறது. கடிதங்களை ஒரே நேரத்தில் அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் வர தடை
@மலும், திட்ட அனுமதி தொடர்பான விளக்கம் அளித்தல், கட்டணம் செலுத்துதல், நிலம் ஒப்படைப்பு ஆவணங்கள் அளித்தல், ஆகிய பணிகளுக்காக, விண்ணப்பதாரர், அவரது கட்டட அமைப்பியல் வல்லுனர் அல்லது உரிமம் பெற்ற நில அளவையாளர் மட்டுமே அலுவலகத்துக்கு வரவேண்டும். இவர்களை தவிர்த்து மற்றவர்கள் திட்ட அனுமதி சம்பந்தமாக, எந்த அதிகாரியையும் சந்திக்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.
திட்ட அனுமதி தொடர்பாக அழைக்கப்படும் விண்ணப்பதாரர், கட்டட அமைப்பியல் வல்லுனர், உரிமம் பெற்ற நில அளவையாளர் ஆகியோர், தங்களது விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் பிரிவை சேர்ந்த அதிகாரிகளை மட்டுமே சந்திக்க வேண்டும். வேறு, பிரிவை சேர்ந்தவர்களை சந்திப்பதோ, அவர்கள் மூலமாக பரப்பு திட்ட பிரிவு அதிகாரிகளை அணுகுவதோ கூடாது.
"அ' பிரிவு வழியில்...
புதிய நடைமுறைப் படி, "அ' பிரிவு வழியாக வரும் அனைத்து விண்ணப்பங்களையும், ஒரு மாதத்துக்குள் ஆய்வு செய்து, அதன் மீதான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.
இந்த பிரிவில், மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள, அனைத்து திட்ட அனுமதி விண்ணப்பங்களையும் உடனடியாக முடிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், 75க்கும் அதிகமாக வீடுகளுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும், இனி "அபாஸ்' எனப்படும் கணினி வழி துரித ஆய்வு மூலம் முடிக்கப்படும்.
ஜூன் இறுதிக்குள்...
நிலுவை விண்ணப்பங்கள் குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஆறு மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள, அனைத்து திட்ட அனுமதி விண்ணப்பங்கள் மீதான ஆய்வுகளை ஜூன் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.ஆள் பற்றாக்குறை
திட்ட அனுமதி தொடர்பாக விண்ணப்பதாரர் நிலையில் உள்ள விஷயங்கள் தொடர்பாக மட்டுமே சி.எம்.டி.ஏ., நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால், திட்ட உதவியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட நிர்வாக நடைமுறை காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவில்லை. இது புதிராக உள்ளது என்கின்றனர் கட்டுமான துறையினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.