DISTRICT NEWS | சொத்து வரியை வங்கியில் செலுத்தும் வசதி :தொழில்நுட்ப குளறுபடியால் தாமதம் Dinamalar
Advertisement
சொத்து வரியை வங்கியில் செலுத்தும் வசதி :தொழில்நுட்ப குளறுபடியால் தாமதம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
03:14

சென்னை : சொத்து வரியை எளிதாக வங்கிகளில் செலுத்தும் வசதி, தொழில்நுட்ப குளறுபடிகளால், அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு, சொத்து வரியை செலுத்துவதில், எளிதான நடைமுறை இல்லாததால், வசூலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 64 சதவீதம் மட்டுமே வரி வசூல் நடந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில், சொத்து வரியை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், எளிதாகச் செலுத்தும் புதிய நடை கொண்டு வரப்படும் என மாநகராட்சி அறிவித்தது. வங்கிகளும் இதில் ஆர்வம் காட்டியதால், நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கின. மே 31ம் தேதி, மேயர் சைதை துரைசாமி முன்னிலையில், வங்கிகளுக்கும், மாநகராட்சிக்கும்இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, ஜூன் 15ம் தேதி முதல், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மாநகராட்சி அறிவித்தது.
இதன்படி, வங்கிகளில் சொத்து வரி செலுத்தும் நடைமுறை, நேற்று முன்தினம் நடைமுறைக்கு வந்திருக்க வேண் டும். ஆனால், குறித்த நாளில், இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"மாநகராட்சிக்கும், வங்கிகளுக்குமிடையே தனித்தனியாக, பிரத்யேக மென்பொருள் தயாரிக்க வேண்டும். மாநகராட்சி தயாரித்து விட்டது. சில வங்கிகள் மென்பொருள் தயாரிப்பை இன்னும் முடிக்கவில்லை. இது முடிந்ததும், வங்கி, மாநகராட்சி
மென்பொருட்களுக்கிடையே, ஒருங்கிணைப்பு ஏற்படுத்த வேண்டும்.
சில வங்கிகள் மென்பொருள் தயாரிப்பு முடியாததால், புதிய வசதியை, குறித்த நாளில் அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை செயல்பாட்டிற்கு வர, ஓரிரு வாரம் ஆகும்,'
இவ்வாறு அவர் கூறினார்.
மென்பொருள் ஒருங்கிணைப்பு முடிந்து, வங்கிகளில் சொத்து வரி செலுத்தும் நடைமுறை, ஜூலை மாதத்தில் தான் அமலுக்கு வரும் என தெரிகிறது.

வங்கிகள் மென்பொருள் தயாரிப்பு முடியாததால், புதிய வசதியை, குறித்த நாளில் அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.