நகை திருட வந்தவர்கள் மது குடித்து நிதானம் :மெரைன் இன்ஜினியர் வீட்டில் கைவரிசை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
03:14

நீலாங்கரை : இன்ஜினியர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து, தங்க நகைகளை திருடி சென்றனர்.
கொட்டிவாக்கம், ஏ.ஜி.எஸ்., காலனி, மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முத்தழகு, 51. மெரைன் இன்ஜினியர். கப்பலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரமா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை அண்ணா பல்கலைக் கழக, முன்னாள் மாணவர் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். நள்ளிரவு 11 மணிக்கு வீடு திரும்பினார்.
உடைப்பு
அப்போது, வீட்டு கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்து. உள் கதவு பூட்டு அறுக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 80 சவரன் தங்க நகைககள், 70 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போயிருந்தது.
அடையாறு துணை கமிஷனர் (பொறுப்பு) அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ராணி வரவழைக்கப்பட்டது. அது, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இந்திராநகர் வரை ஓடி, கட்டுமான பணி நடக்கும் இடத்தில் நின்றது.
பின், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த திருட்டு சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 98ம் ஆண்டு, இதே வீட்டில், அருகில் உள்ள மாமரத்தில் ஏறி, பால்கனி வழியாக உள்ளே புகுந்த திருடன், பீரோவை திறக்க முயன்றபோது, சப்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்து வந்ததால் தப்பிச் சென்றான்.
தடயம்
இந்த முறை திருடிய கொள்ளையர்கள் கதவு பூட்டை உடைக்க பயன்படுத்திய கடப்பாறை உள்ளிட்ட பொருட்களை வீட்டின் பின்புறம் விட்டுச் சென்றுள்ளனர்.
போலீசார் கூறுகையில், ""திருட்டு போன தங்க நகைகள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிற்கு அருகே கட்டட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மோப்ப நாய் ராணியும் நீண்ட தூரம் ஓடி, கட்டுமான பணி நடக்கும் இடத்தில் நின்றது. இதனடிப்படையில் விசாரணை துவக்கப்பட்டுள்ளது,'' என்றனர்.


நிதானத்துடன்...
முத்தழகுவின் வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த திருடர்கள் வீட்டில் இருந்து அவர்கள் புறப்பட்டு சென்றதும் உள்ளே புகுந்துள்ளனர். முதலில், வீட்டில் உள்ள அலமாரிகளில் உள்ள பழைய பொருட்களை பரிசோதித்து பின், பீரோவை உடைத்து நகைகளை திருடியுள்ளனர்.
பின் நிதானமாக பிரிட்ஜ்ஜில் வைத்திருந்த விலை உயர்ந்த மதுபான பாட்டிகளை எடுத்து தொடு உணவுடன் குடித்து சென்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201209:31:49 IST Report Abuse
Pugazh V சாதாரண நடுத்தர மக்களே இப்போதெல்லாம் பேங்க் லாக்கர் எடுத்திருக்கிறார்கள். நகைகளை அதில் வைக்கிறார்கள். ATM வந்த பிறகு பர்சிலோ வீட்டிலோ நூறு ரூபாய்க்கு மேல் கேஷாக பெரும்பாலோர் வைத்திருப்பதே இல்லை. பொறியியலாளராக இருந்தும் இவர் ஏன் இவ்வளவு பணம் நகைகளை வீட்டில் வைத்திருந்தார்? கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு "சிறப்பாக" இருக்கும் தமிழ்நாட்டில் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
19-ஜூன்-201205:33:33 IST Report Abuse
v.sundaravadivelu எய்யா முத்தழகு..இப்டியுமா களவாணிப் பசங்களுக்கு விருந்து வச்சு அனுப்புவ?. அடிக்கடி இப்டி யாராச்சும் ஏமாந்து நகைகளை உட்டுக்கினே தான் இருக்கீங்க... செய்தி வந்த வண்ணமா இருக்கு...வூட்டாண்ட அதிகமா நகை இருந்துச்சினா போடற அளவு ஒரு நாலஞ்சு பவுனை வச்சுக்கிட்டு மிச்சத்தை லாக்கரிலையோ அல்லது அடகு வச்சோ தப்பிக்கவே பல பணக்காரங்களுக்கு தெரியறது இல்லை... ஒரு சமயம் இந்த எம்பது பவுன் இவுகளுக்கு கொசுறு மாதிரியோ? லாக்கரில எண்ணூறு பவுனு இருக்குமோ... அப்டினா நோ ப்ராப்ளம் மாமு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.