செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கட்டாய வசூல்: பட்டியல் போட்டு பணம் கறப்பதாக புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

18 ஜூன்
2012
03:57
பதிவு செய்த நாள்
ஜூன் 18,2012 03:19

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பிரசவம் மற்றும் சிகிச்சைக்காக வருபவர்களிடம், கட்டாய வசூலில், மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.வ‹ல் பட்டியல்
சிகிச்øŒக்காக ஊழியர்கள் பெறும் தொகை:
டூ நோயாளிகளை தள்ளுவண்டியில் கொண்டு செல்ல, ரூ.50.
டூ வார்டுகளில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்ய, ரூ.20.
டூ பார்வை நேரம் தவிர, மற்ற நேரங்களில் நோயாளிகளைப் பார்க்க, ரூ.50.
டூ பிரசவ வார்டில் ஆண் குழந்தை பிறந்தால், ரூ. 1,000.
டூ பெண் குழந்தை பிறந்தால், ரூ. 700.
டூ குளுகோஸ் ஏற்றினால், ரூ. 50.
கிராம மக்கள்
செங்கல்பட்டை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான நோயாளிகள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை, பிரசவத்திற்காக வருகின்றனர். அவர்களின் அறியாமையையும், பதட்டத்தையும் பயன்படுத்தி, மருத்துவமனை ஊழியர்கள், பணத்தை கறக்கின்றனர் என்றும், பணம் தராத நோயாளிகளை, ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
நேரடி புகார்
ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் கூறும்போது, ""என் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்தேன்.
பிரசவம் முடிந்ததும், மருத்துவ பெண் ஊழியர் ஒருவர், "பெண் குழந்தை பிறந்து, மூச்சு திணறலால் அவதிப்பட்டது. கஷ்டப்பட்டு காப்பாற்றினோம். அதற்கு, 700 ரூபாய் கொடுங்கள்' என்றார்.
மனைவிக்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கேட்ட பணத்தை கொடுத்தேன்.
விசாரித்தபோது, "குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல், நல்ல முறையில் பிறந்தது' என தெரிந்தது. உடனடியாக, மருத்துவமனை, "டீனை' சந்தித்து, புகார் கொடுத்தேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்துள்ளார்,'' என்றார்.
நடவடிக்கை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை "டீன்' (பொறுப்பு) ஜெகன்நாதன் கூறும்போது, ""பணம் வாங்கிய, பிரசவ வார்டு பெண் உதவியாளர், அடையாளம் காணப்பட்டுள்ளார். செய்த தவறுக்கு, விளக்கம் தர, அவருக்கு ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201208:19:06 IST Report Abuse
மதுரை விருமாண்டி வழக்கு போட்டும் பிரயோசனமில்லை.. அதான் லஞ்ச வழக்கு போட்டா வாய்தா வாங்குவதில் முதல்வர் முன்னோடியாக, உதாரண புருஷியாக திகழ்கிறாரே..
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
19-ஜூன்-201205:59:45 IST Report Abuse
v.sundaravadivelu இது ஓர் இந்திய சாபக்கேடு..அரசாங்க மருத்துவமனை என்றால் இப்படி கேவலமாகதான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது... காசு பணம் இல்லாத ஏழை எளிய மக்கள் பயனாளிகளாக இருக்க வேண்டிய இந்த இடத்தில், வசதி படைத்தவர்களும் அவ்வப்போது புகுந்து, கிஞ்சிற்று பணத்தை அந்த ஊழியர்களுக்குத் திணித்து , பணம் கொடுக்க முடியாத ஏழை மக்களை பாரபட்சமாகக் கருதி ஒதுக்க வேண்டிய ஓர் கொடுமையான சூழலுக்கு ஆளாக்கி விட்டார்கள் என்றே என் மனசாட்சி சொல்கிறது.. சிங்கப்பூரிலோ, அமெரிக்காவிலோ, ஜப்பானிலோ,ஜெர்மனியிலோ , கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ .. இப்படி பல நாடுகளை அடுக்கி கொண்டே போகலாம், ... இந்த நாடுகளில் எல்லாம் சத்தியமாக அரசாங்க ஆசுபத்திரி என்பது நம் நாட்டின் தனியார் ஆசுபத்திரிகளைக் காட்டிலும் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கக் கூடும் என்பது என் அனுமானம்... நம் நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு சுகாதாரம் மற்றும் ஏழைகளுக்கு உறுதுணை அற்றும் செயல்பட்டு வருகிறன்றன கவர்மெண்டு ஆசுபத்திரிகள்?.. சத்தியமாக இந்த நாட்டினை ஆளுகிற அரசுக்கு தான் இந்தக் கேவலம்... இந்த அரசாங்கம் தான் பெரிய கண்டனத்துக்கு உரியதாகும்... என்னைக் கேட்டால் இவர்களை கொஞ்ச காலமாவது யூஸ் பண்ணி ஒதுக்கி வைத்து விட்டு சிங்கப்பூர் அரசாங்கத்தையோ ஜப்பான் அரசாங்கத்தையோ வந்து ஆளச் செய்யப் படுமேயானால் இந்தக் காலாவதி ஆகிப் போன எவ்வளவோ நல்ல விஷயங்கள் மீண்டும் புத்துயிர் பெறக்கூடும் என்பது எனது அசைக்கமுடியாத எண்ணம்...
Rate this:
Share this comment
Cancel
simbu - gingee  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-201217:27:38 IST Report Abuse
simbu இப்படி பட்ட லஞ்ச பிரச்சனை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிண்றன. அவர்களை ஒன்றும் செய்ய இயலாத சட்டங்கள் நமது நாட்டில் மட்டும் தான். சட்டம் மாற்ற பட்டால் தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.