DISTRICT NEWS | குறைந்த கட்டணத்தால் லாரிகள் கிடைப்பதில் சிக்கல் : குடிநீர் வினியோகத்தில் நகராட்சி திணறல் Dinamalar
Advertisement
குறைந்த கட்டணத்தால் லாரிகள் கிடைப்பதில் சிக்கல் : குடிநீர் வினியோகத்தில் நகராட்சி திணறல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
03:20

பல்லாவரம் : குறைந்த கட்டணம் வழங்கப்படுவதால், குடிநீர் வினியோகத்திற்கு லாரிகள் கிடைக்காமல், பல்லாவரம் நகராட்சி தவித்து வருகிறது. இதனால் இருக்கின்ற லாரிகளை விரட்டிவிரட்டி இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி முதல்...
கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை மழை கிடைக்காத நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் நிலத்தடி நீரும் வற்றிவிட்டது.
குடிநீருக்கு மக்கள் தவம் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பாலாறு குடிநீர் வினியோகம் நடைபெறும் பல்லாவரம் நகராட்சியில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்னைகள் காரணமாக, 40 லட்சம் லிட்டர் வரை மட்டுமே தினசரி குடிநீர் பெறப்படுகிறது. குறைந்த அளவில் கிடைக்கும் குடிநீரை அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதால், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
ஒன்பது லாரிகளில்...
நகராட்சியின் மூன்று குடிநீர் லாரிகள், தனியார் மூலமாக ஆறு குடிநீர் லாரிகள் என, மொத்தம் ஒன்பது லாரிகளில் தினசரி குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. ஒரு லாரி நாளொன்றுக்கு, ஐந்து முதல் ஆறு லோடு வரை வினியோகம் செய்கிறது. அப்படி இருந்தும் பல்வேறு பகுதிகளில் வாரக்கணக்கில் குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார் பரவலாக காணப்படுகிறது.
இதற்கு லாரிகளில் குடிநீர் வினியோகம் தாமதம் ஆவதே காரணம் என்று புகார் எழுந்துள்ளது. பல வார்டுகளில் கவுன்சிலர் வந்த பிறகே லாரியில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி, மணிக்கணக்கில் தண்ணீர் லாரியை ஓரம்கட்டிவிடுவதாகப் புகார் எழுந்தது.
இன்னும் சில இடங்களில் அரசியல்வாதிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் லாரிகள் தெருத் தெருவாகச் சுற்றி நேரத்தை வீணாக்குவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, லாரிகள் மூலமாக நடைபெறும் குடிநீர் வினியோகத்தை துரிமாக்கும் வகையில், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பல்லாவரம் நகராட்சியில் நடந்தது.
கமிஷனர் ராமமூர்த்தி இதற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் லாரிகள் பற்றாக்குறையாக இருப்பதால், குடிநீர் லோடு ஏற்றி வரும் லாரிகளை உடனடியாக வினியோகம் முடித்து திருப்பி அனுப்ப வேண்டும்; கோடை முடியும் வரை கவுன்சிலர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று, கோரிக்கை வைக்கப்பட்டது.
640 ரூபாய்
பல்லாவரம் நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி கூறுகையில், "குடிநீர் லாரிகளுக்கு ஒரு லோடுக்கு, 640 ரூபாய் வழங்கப்படுகிறது. இது குறைவு என்று லாரி உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதனால், லாரிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது,' என்றார்.
லாரி உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "தனியாருக்கு ஒரு லோடு கொடுத்தால் எங்களுக்கு, இரண்டு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. மூன்று மடங்கு லாபம் கிடைக்கும் இடத்திற்கு தானே வினியோகம் செய்ய முடியும். அதுவும் எங்களுக்கு இது சீசன் தொழில் வேறு,' என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.