DISTRICT NEWS | ஓட்டுனர் கவனக்குறைவால் கடைக்குள் புகுந்தது மாநகர பேருந்து Dinamalar
Advertisement
ஓட்டுனர் கவனக்குறைவால் கடைக்குள் புகுந்தது மாநகர பேருந்து
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
02:57

கீழ்க்கட்டளை : அலைபேசியில் பேசிய படி கவனக்குறைவுடன் பஸ்சை ஓட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ் கடைகளுக்குள் புகுந்தது.
அலைபேசியில்...கோவளத்தில் இருந்து, பல்லாவரம் நோக்கி மாநகர பஸ் ஒன்று, நேற்று மதியம் 1 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தது. சேவியர் அன்பரசு,30 என்பவர் ஓட்டிச்சென்றார். நடத்துனராக அமல்ராஜ் என்பவர் இருந்தார். பஸ்சில், 15க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
கீழ்கட்டளை சிக்னல் அருகே, ஈச்சங்காடு பகுதி மேடவாக்கம் மெயின்ரோட்டில் வந்துக் கொண்டிருந்த, பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரம் இருந்த கடைகளுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பஸ் புகுந்த பிரியாணி கடை, அலைபேசி கடைகள் இன்று திறக்கப்படாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஓட்டுனர் அலைபேசியில் பேசியப்படி, கவனக்குறைவுடன் நடந்து கொண்டதால், விபத்து நிகழ்ந்ததாக கூறி பொதுமக்கள் சேவியர்அன்பரசுவை தாக்கினர். போக்குவரத்து பாதிப்பு இதையடுத்து, ஓட்டுனரும், நடத்துனரும் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவத்தால் மேடவாக்கம் மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து, "ரெக்கவரி' இயந்திரம் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் கடைகள் சேதமடைந்தன. விபத்தை நேரில் பார்த்த கோவிந்தம்மாள் கூறுகையில்," எங்கள் வீடு இருக்கும் மேடவாக்கம் மெயின்ரோடு பகுதி திருப்பம் நிறைந்தது. அந்த இடத்தில் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் ஒரு கையில், "ஸ்டியரிங்' பிடித்தபடி மொபைல்போனில் பேசி வந்த போது விபத்து ஏற்பட்டது,'' என்றார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.