DISTRICT NEWS | குடிக்க திருடியவரை மடக்கி போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் Dinamalar
Advertisement
குடிக்க திருடியவரை மடக்கி போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
02:57

எழும்பூர் : போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட திருடனை, பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கூவம் ஆற்றை ஒட்டிய குப்பத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்,22. நேற்று பிற்பகல் எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் குடித்தான். போதையில் அருகே உள்ள பழைய கட்டடத்தில் பிளாஸ்டிக் குழாயை திருட முயன்றான். இதைப் பார்த்த காவலாளி சத்தம் போட்டார். பொதுமக்கள் விரட்டிச் சென்று அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவனிடம் இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரித்தார். பழைய குற்றவாளி என தெரிய வந்தது. போலீசாரிடம் சாந்தகுமார் கூறுகையில், "பழைய கட்டடங்களில் நுழைந்து பிளாஸ்டிக், இரும்பு பைப்புகளை திருடி கடைகளில் போட்டு தண்ணி அடித்து வந்தேன். எனது கழுத்தில் இருந்த ஒரு சவரன் செயினை, என்னை போலீசில் பிடித்துக் கொடுத்தவர்களில் யாரோ ஒருவர் பறித்துக் கொண்டார்' என்றான். திருட்டு வழக்கில் அவரை சிறையில் அடைத்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.