E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தலைமை செயலகத்தில் வாகனங்களுக்கு போலீசார் கெடுபிடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 செப்
2012
06:17

சென்னை: கட்டடப் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தலைமைச் செயலக வளாகத்திற்குள் வாகனங்களை அனுமதிப்பதில், போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர்.
தலைமைச் செயலகம் அமைந்துள்ள, புனித ஜார்ஜ்கோட்டை வளாகத்தில், அரசுத் துறைகளின் செயலர்கள், இயக்குனர்கள் அலுவலகங்கள், துறைகளின் நிர்வாக அலுவலகங்கள் இயங்கும் நாமக்கல் கவிஞர் மாளிகை, தொல்லியல் துறைக்குச் சொந்தமான அருங்காட்சியகம் மற்றும் ராணுவ அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.தலைமைச் செயலகம் என்பதால், பாதுகாப்பிற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தற்போது, நாமக்கல் கவிஞர் மாளிகையில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள், பொதுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன நிறுத்துமிடத்திற்கு புதிய திட்டத்தை உருவாக்கினர். இதன்படி, அமைச்சர்கள், அரசு செயலர்கள் வாகனங்கள் மட்டும் தலைமைச் செயலக வளாகத்தில் நிறுத்துவது என்றும், மற்ற வாகனங்களை வெளியில் நிறுத்துவது என்றும் முடிவுஎடுக்கப்பட்டது.
தொடர்ந்து, உள்ளே நிறுத்தப்படும், வந்து செல்லும் வாகனங்களுக்கான சிறப்பு "பாஸ்' வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில் கட்டுப்பாடுகளை திடீரென, பாதுகாப்பு போலீசார் அமல்படுத்தினர்.அமைச்சர்கள், அரசு செயலர்கள் வாகனங்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் வாகனங்கள் மட்டுமே, சிறப்பு "பாஸ்' அடிப்படையில் அனுமதிக்கப்பட்டன. மற்றவர் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் வாகனங்களை அனுமதிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது.பத்திரிகையாளர்கள் வழக்கமாக வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு செல்லவும் அனுமதிக்கவில்லை. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, "பாஸ்' இருந்தால் தான் உள்ளே அனுமதிக்க முடியும் என, போலீசார் கறாராக சொல்லிவிட்டனர்.இதனால், பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடை யில் வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்பு மற்றும் கட்டடப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால், வாகனங்களை அனுமதிக்க முடியாது என, போலீசார் காரணம் கூறி வருகின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.