திருப்பூர் : பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், திருப்பூர், காங்கயம் பகுதி களுக்கு நேற்று வந்து சேர்ந்தது.
பி.ஏ.பி.,
பாசன திட்டத்தின் கீழ், இரண்டாம் மண்டல பாசனத்துக்கு உட்பட்ட, 96 ஆயிரத்து
250 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த 15ம் தேதி
தண்ணீர்
திறக்கப்பட்டது. 17 நாள் திறப்பு; 6 நாள் நிறுத்தம் என்ற அடிப்படையில்,
இரண்டு சுற்றுக்கள் தண்ணீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் மற்றும் வெள்ள
கோவில்
பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு எளிதாக தண்ணீர் சென்று சேரும்
வகையில், சுற்றுக்களுக்கு திறந்து விடப்படும் நீர் கணக்கிட்டு, குறிப்பிட்ட
நாட்
களில் வழங்கப்பட்டு வருகிறது.
கடை மடை பகுதியான வெள்ளகோவில்
கால்வாய் மூலம், 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரண்டு
சுற்றுக்கள் அறிவிக்கப்பட்டாலும், சுற்றுக்கு ஆறு நாட்கள் வீதம், வெள்ள
கோவில் கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு 12 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது.
அதேபோல்,
காங்கயம், கள்ளிபாளையம், திருப்பூர், முத்தணம்பாளையம், சிவன்மலை, பெருந்
தொழுவு பகுதிகளை உள்ளடக்கிய பல்லடம் கோட்ட பகுதியில், 16 ஆயிரம் ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காங்கயம்
பகுதிகளுக்கு ஒரே சுற்றாக முழு அளவு தண்ணீரும் ஆறு நாட்
களில் வழங்கப்பட்டு விடும். மற்ற பகுதிகளில் மூன்று "ஷிப்டு'களாக பாசன நிலங்கள் பிரிக்கப்பட்டு, 23 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்
படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், இரண்டு சுற்றுக்களுக்கு 17 நாள் திறப்பு; ஆறு நாள்
நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் திருட்டுக்கள்
அதிகளவு நடக்க வாய்ப்புள்ளது.
கடை
மடை பகுதிகளான, திருப்பூர், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளுக்கு முறையாக
குறிப்பிட்ட நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில், பாசன
சங்கங்களுடன் இணைந்து, நீர் வந்து சேர எடுத்துக் கொள்ளும் நேரம், நீரின் வேகம், பாசன நிலங்
களுக்கு சென்று சேர ஏற்படும் காலம் ஆகியவற்றை கணக்கிட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வழங்கும் காலத்தை
நிர்ணயித்துள்ளதாகவும், பருவ மழை ஒத்துழைத்து, திட்ட அணைகள் நிரம்பினால் மட்டுமே, கூடுதல் சுற்றுக்கள் தண்ணீர் திறக்க
வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.