சென்னை:முன்னறிவிப்பின்றி, நடைபெற்ற தண்டவாள பராமரிப்பு பணிகளால், மூன்றரை மணிநேரம் பயணிகள் அவதிப்பட்டனர்.
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பாதையில், வில்லிவாக்கம், கொரட்டூர் இடையே,
நேற்று காலை 10:30 மணிக்கு, பேக்கேஜிங் இயந்திரம் மூலம், தண்டவாள பராமரிப்பு பணிகள் துவங்கின. மூன்றரை மணி நேரம் கழித்து பணிகள் முடிந்தன.
இதனால், மின்சார ரயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் சென்றன. எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கென தனி பிளாட்பாரம் உள்ள அம்பத்தூர், ஆவடியில் மட்டுமே, மின்சார ரயில்கள் நின்று சென்றன.
இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். கொரட்டூர், பட்டரைவாக்கம் பகுதிகளை சேர்ந்தவர்கள் அம்பத்தூருக்கும், திருமுல்லைவாயில், பட்டாபிராம், அண்ணணூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவடிக்கும் வந்து மின்சார ரயிலில் ஏறிச்சென்றனர்.