சென்னை:சாலையில் நிறுத்தப்படும், ஷேர் ஆட்டோக்களை திருடி விற்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ., நகர், தண்டையார்பேட்டை படேல் நகர் உள்ளிட்ட, மூன்று இடங்களில், ஷேர்ஆட்டோக்கள், அடுத்தடுத்து திருடு போகின.
திருடுபோன ஷேர்ஆட்டோ உரிமையாளர்கள், போலீசில் புகார் அளித்தனர். ஆர்.கே.நகர் போலீசார், ஷேர்ஆட்டோக்களை திருடும் நபர்களை பிடிக்க, தனிப்படை அமைத்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த, ராதாகிருஷ்ணன் மகன் வெற்றிவேல், 27, என்பவரை பிடித்து விசாரித்ததில், ஆர்.கே.நகர் போலீஸ் எல்லையில் திருடிய, மூன்று ஷேர்ஆட்டோக்கள் உள்ளிட்ட, எட்டு ஆட்டோக்களை திருடி விற்றதை ஒப்புக் கொண்டார்.
இவர் கொடுத்த தகவலின்படி, திருட்டு ஆட்டோக்களை வாங்கிய நபர்களிடம் இருந்து, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.