சென்னை:சென்னையில், போலீசார், விடிய விடிய நடத்திய சோதனையில், சந்தேகப்படும் நபர்கள், பழைய குற்றவாளிகள் என, 1,040 பேர் சிக்கினர்.
சென்னையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், ரவுடிகள், பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையிலும், போலீசார், அவ்வப்போது இரவு முழுவதும், அதிரடி சோதனை, ரோந்துப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், போலீசார், சிறு சிறு குழுக்களாக பிரிந்து, சென்னை முழுவதும் சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில், 569 பேர், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, 153 பேர், வாரண்ட்டில் தேடப்பட்ட, 40 பேர், பழைய குற்றவாளிகள், 11 பேரும் சிக்கினர்.
இதுதவிர, குடிபோதையில் வாகனம் ஓட்டிய, 267 பேர் என, மொத்தம், 1,040 பேரை போலீசார் கைது செய்தனர். அதிரடி சோதனை தொடரும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.