சென்னை:வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை அசோக் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். எரிவாயு ஏஜன்சியின் முகவராக உள்ளார்.
இவர், அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே காரை நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அசோக் நகர் தீயணைப்பு படையினர், போராடி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள், காரின் பெரும்பகுதி சேதமடைந்தது.
மர்ம நபர்கள், காருக்கு தீ வைத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.