சென்னை:சென்னையில் நடந்த, "விப்ரோ மாரத்தான்' போட்டியில், அரை மாரத்தானில், ரஜேஷ், முதலிடம் பிடித்தார்.
சென்னையில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, "விப்ரோ மாரத்தான்' போட்டி நடந்தது. முழு மாரத்தான் போட்டி, ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, கஜேந்திரா சர்க்கிளில், நேற்று காலை, 5:00 மணிக்கு துவங்கி, சர்தார் படேல் சாலை, திரு.வி.க., பாலம், சாந்தோம் நெடுஞ்சாலை, கலங்கரை விளக்கம், நேப்பியர் பாலம் சென்று மீண்டும், ஐ.ஐ.டி., வளாக மைதானத்தை வந்தடைந்தது.
முழு மாரத்தானில், உகாண்டாவை சேர்ந்த ஆண்கள் பிரிவில் இஸ்மாயில் சென்யாங்கி, பெண்கள் பிரிவில் இந்த்ரேஷ் திராஜ் முதலிம் பிடித்தனர்.
அரை மராத்தானில், ராஜேஷ், மிச்சேல், 10 கி.மீ., மாரத்தானில், நஞ்சுண்டா, ஆன்ட்ரியா ஆகியோர், முதலிடம் பிடித்தனர்.
முழு மாரத்தனில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அரை மாரத்தானுக்கு, 20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் என, பரிசு வழங்கப்பட்டது.