சென்னை:முன்னாள் முதல்வர் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தவர் வீட்டில், பாதுகாப்பு போலீசாரின்
துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா நகர், "எம்' பிளாக்கை சேர்ந்தவர் ஆறுமுகம்; தொழிலதிபர். நில அபகரிப்பு செய்ததாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மீதும் போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
இதனால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரியிருந்தார். கோர்ட் உத்தரவுப்படி, இவருக்கு, போலீஸ்
பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் சுற்று அடிப்படையில், பாதுகாப்புப்
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, மனோகரன் என்ற காவலர் பாதுகாப்புப் பணியில் இருந்தார். ஆறுமுகம் தூங்கச் சென்றதும், வீட்டின் வெளி அறையில் இருந்த மனோகரன், இரவு, 11:00 மணியளவில், தனது துப்பாக்கியில் உள்ள, தோட்டாவை சுத்தப்படுத்தியதாகக் கூறப்
படுகிறது.
எதிர்பாராத விதமாக, துப்பாக்கி பயங்கர சத்தத்
துடன் வெடித்தது. அடுத்தடுத்து இரண்டு தோட்டாக்கள் பாய்ந்ததில், வீட்டுச்சுவரில் சேதம் ஏற்பட்டது.
ஆயுதப்படை உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காவலரின் கவனக்குறைவால் சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காவலர் மனோகரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.