தேங்கிய மழைநீர் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 டிச
2012
20:16

தாம்பரம் : தாம்பரம் - முடிச்சூர் சாலையில், வழக்கம்போல், கிருஷ்ணா நகர் அருகே, மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு, நெடுஞ்சாலை துறையும், நகராட்சியும் ஒருங்கிணைந்து, உரிய தீர்வு காண வேண்டும். வழக்கம் போல் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில், மழைநீர் தேங்கி உள்ளது. வேளச்சேரி சாலையில், ஆங்காங்கே தேங்கிய மழைநீரால், நேற்று காலை, வாகனங்கள், ஊர்ந்து சென்றன.தாம்பரம் - முடிச்சூர் சாலையில், வழக்கம்போல், கிருஷ்ணா நகர் அருகே, முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால், நேற்று காலை, போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெருங்களத்தூர் முதல், கிருஷ்ணா நகர் வரை, சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து
நின்றன. வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றதால், அந்த இடத்தை கடக்க, நீண்ட நேரம் ஆனது. இருசக்கர வாகனங்கள், வெள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்றன. "இந்த இடத்தில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு விட்டது, இதனால், எவ்வளவு மழை பெய்தாலும், வெள்ளம் தேங்காது' என, நெடுஞ்சாலை துறையினர் கூறினர். அதேபோல், "கிருஷ்ணா நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு விட்டன.
குற்றச்சாட்டு இதனால், கிருஷ்ணா நகரில் வழக்கமாக தேங்கும் இடத்தில், துளி வெள்ளம் கூட தேங்க வாய்ப்பே இல்லை' என, நகராட்சி நிர்வாகம் கூறியது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழைக்கு, வழக்கம் போல், அந்த இடத்தில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து ஸ்தம்பித்தது. நெடுஞ்சாலை துறையும், நகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்காததே, மழைநீர் தேங்குவதற்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாம்பரத்தில் 65 மி.மீ., மழைதாம்பரம் தாலுகாவில், நேற்று முன்தினம் காலை முதல், நேற்று காலை வரை, 65 மி.மீ., மழை பெய்துள்ளது.வங்கக் கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், மழை பெய்து வருகிறது.இதனால், தாம்பரம் தாலுகாவில், பல இடங்களில், மழைநீர் தேங்கியது. சென்னை விமானம் நிலையம் மற்றும் இந்திய விமான படை பயிற்சி மையம் ஆகிய இடங்களில் உள்ள, மழைமானியில் பதிவாகியுள்ள அளவை கொண்டு, தாம்பரம் தாலுகாவில் பெய்த மழையின் அளவு கணக்கிடப்படும். நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல், நேற்று காலை, 8:00 மணி வரை, தாம்பரம் தாலுகாவில், 65 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது.புறநகரில் போக்குவரத்து பாதிப்பு: தென்சென்னையின் பிரதான சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, எல்.பி., சாலை, தாம்பரம் - வேளச்சேரி சாலை, மற்றும் விஜயநகர்தரமணி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெருங்குடி, துரைப்பாக்கம் பகுதிகளில், மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. திருவான்மியூர் பேருந்து நிலையம், சந்தை பகுதிகளில் பெருமளவு மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-டிச-201204:38:49 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஒரு வேளை மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தவறாக பயன் படுத்த பட்டதோ. பயன் படுத்தி கொண்டார்களா?????????????, லஞ்ச வளர்ப்பு துறை இருக்கும் வரை இது போன்ற இன்னல்கள் வரத்தான் செய்யும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.