குரோம்பேட்டை
: தனியார் கட்டடத்தின் மீது சாய்ந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருக்கும்
மின்கம்பத்தை மாற்றக்கோரி, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும்,
மின்வாரியம் கண்டுகொள்ளாமல் உள்ளது. குரோம்பேட்டை, புரு÷ஷாத்தம்மன் நகர்
பிரதான சாலையில் உள்ள ஒரு மின்கம்பம், சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கடந்த
நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த மின்கம்பம் காற்றில் சாய்ந்து, அருகில்
உள்ள கட்டடத்தின் மீது
விழுந்தது. கட்டடம் தாங்கிப் பிடித்த நிலையில்
உள்ள மின்கம்பத்தில் இருக்கும் ஒயர்கள், கையில் எட்டிப்பிடிக்கும் நிலையில்
உள்ளது. இந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் இருப்பதாகவும், அதை சீரமைக்க
வலியுறுத்தியும் மின்வாரியத்திற்கு, உள்ளூர் பொதுமக்கள் பலமுறை புகார்
அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கவில்லை.
விபரீதம் ஏற்படும் முன், மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும்.