சென்னை : துறைமுகத்தில், தனியார் நிறுவன கிரேன் மோதி, ஊழியர் ஒருவர் பலியானார்.அமைந்தகரையை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 53. இவர், சென்னை துறைமுகத்தில், சிவில் பிரிவில் மேஸ்திரியாக பணிபுரிந்தார். துநேற்று மதியம், ஏழாம் வாயில் அருகே பணியில் இருந்த கோவிந்தசாமி மீது, சரக்கு கையாளும் பிரிவில் உள்ள தனியார் நிறுவன கிரேன் மோதியதில், அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.துறைமுக போலீசார், கிரேனை ஓட்டி வந்த, அடையாறு பகுதியை சேர்ந்த சரவணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.