நெட்டப்பாக்கம்: உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., பெரும் வெற்றி பெறும் என, அ.தி.மு.க., செயலர் அன்பழகன் கூறினார். நெட்டப்பாக்கம் தொகு தியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சூரமங்கலத்தில் நடந்தது.
பெரியசாமி எம். எல்.ஏ., தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க் கள் ஓம்சக்தி சேகர், புரு÷ஷாத்தமன், பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசிய தாவது: புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கு முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 32 துறைகளில் 22 துறைகளுக்கு வாரியத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்புறம் எதற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்கள் என்று தெரியவில்லை. கடந்த காங்., ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய முதல்வர் ரங்கசாமி, தற்போது அதே துறைகளுக்கு வாரியத் தலைவரை நியமித்து வருவது ஏன் என்பது தெரியவில்லை. முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் மாணவ, மாணவியர்களுக்கு லேப் டாப் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஆனால், இதுவரையில் அவரால் எந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை காரணம் அவரிடம் நிர்வாக திறமை இல்லை. இதனால், வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்தன்மையுடன் வெற்றி பெறுவது நிச்சயம். இவ்வாறு கூறினார்.