திருமங்கலம்:திருமங்கலம் அருகே காதலியை கொன்று எரித்த காதலன் கவுதம் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் உரப்பனூருக்கு செல்லும் காட்டுப்பாதையில், டிச.,2 ல் கொலை செய்யப்பட்ட பெண் உடல் எரிக்கப்பட்டு கிடந்தது. போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், திரளியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகள் மாரியம்மாள் என தெரியவந்தது. அவரை கொலை செய்த காதலன் மேல உரப்பனூர் கவுதம், ஆர்.ஐ.,ராஜேந்திரனிடம் சரணடைந்தார்.
அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது: மாரியம்மாளும் நானும் காதலித்தோ ம். திருமணம் செய்ய வற்புறுத்தினார். டிச., 1 ல் திருமணம் குறித்து முடிவு எடுக்கலாம் என கூறி மாரியம்மாளை வரவழைத்தேன். இருவரும் பேசியபோது, மாரியம்மாள் திருமணமாகி கணவரை பிரிந்தவர் என தெரிய வந்தது. மாரியம்மாளின் சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன், என தெரிவித்துள்ளார்.
கவுதமை ஆர்.ஐ., ராஜேந்திரன் போலீசில் ஒப்படைத்தார்.