Advertisement
தினமலர் முதல் பக்கம் » மதுரை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
கொசுக்களுக்கு பிறந்த வீடு; பன்றிகளுக்கு புகுந்த வீடு அவலங்களே அசரும் 5வது வார்டு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012,03:11 IST

மதுரை:வீட்டின் சுவர்களில் நெளியும் சாக்கடை புழுக்கள், குடியிருப்பை சுற்றிலும் அள்ளப்படாத குப்பை, குடிநீரில் சாக்கடை கழிவு, சுகாதாரமில்லாத கழிப்பறைகளின் துர்நாற்றம், கொசுக்களின் பிறப்பிடம், பன்றிகளின் வளர்ப்பிடம், என மாநகராட்சி 5வது வார்டு (பாக்கியநாதபுரம்) மக்கள் சிரமப்படுகின்றனர்.
தத்தனேரி மயானம் பின்பகுதியில் உள்ள, இவ்வார்டில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லை. குடியிருப்பை சுற்றிலும் பன்றிகள் திரிகின்றன. சாக்கடை புழுக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. சுகாதார அலுவலர்களிடம் பலமுறை கூறியும் பலன் இல்லை.
மறியல் செய்ய திட்டம்:
கருப்பாயி: கழிவுநீர் வாய்க்கால் அடைபட்டுள்ளதால், வாஞ்சிநாதன் தெருவின் சாக்கடை கழிவுகள் வெளியேற வழியில்லை. சாக்கடைக்குள் வசிக்கிறோம். புழுக்கள் வீட்டின் சுவர்களில் ஊர்ந்து செல்கின்றன. சுகாதார சீர்கேட்டால், காய்ச்சல் ஏற்படுகிறது. நிரந்தர தீர்வு காண மறியல் செய்ய உள்ளோம்.
நாகராஜன்: வார்டின் பல பகுதிகளில் குப்பை அள்ளப்படுவதில்லை. சாக்கடை அடைப்புகளை சிலர் சேர்ந்து நீக்கினோம். "கவுன்சிலரை காணவில்லை' என போஸ்டர் ஒட்ட சிலர் முடிவு செய்துள்ளனர்.
பூமாரி: அந்தோணியார் குறுக்குத்
தெருவில், குப்பை, ஈக்கள், கொசுக்கள், பன்றிகள், சுத்தமில்லாத பொதுக் கழிப்பறை மத்தியில் வசிக்கிறோம். ஓட்டுக்கேட்டு வந்த கவுன்சிலர் பின் வரவில்லை. அவரை காணவில்லை என போஸ்டர் ஒட்ட உள்ளோம்.
அ.தி.மு.க., கவுன்சிலர் தங்கப்பாண்டி: என்னை காணவில்லை, என போஸ்டர் ஒட்டப்போகிறார்களா (சிரிப்பு)?. 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து விடுகிறது. இந்த வார்டில் எந்த வேலையும் நடப்பதில்லை. குறைகளை 87545 96085ல் தெரிவித்தால் உதவ தயார், என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.