மதுரை: "மறுபக்கம்' திரைப்பட இயக்கம், கல்லூரிகள் சார்பில், சர்வதேச
ஆவணப்பட மற்றும் குறும்படவிழா, மதுரை பிரேம்நிவாஸ் ஓட்டலில்
நாளை (டிச.,6 ) காலை 10 மணிக்கு துவங்குகிறது.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை காமராஜ் பல்கலை, யாதவா கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, ராஜ் கல்வியியல் கல்லூரி, மதுரைக் கல்லூரியில் டிச.,8 வரை ஆவண மற்றும் குறும்படங்கள் திரையிடப்படும். இந்தியா, ரஷ்யா, மெக்சிகோ, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் 100 படங்கள் திரையிடப்படும். இதை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல்வர் நேரு, விழா இயக்குனர் அமுதன் தெரிவித்தனர்.