பல்லாவரம்:பல்லாவரத்தில் அடுத்தடுத்த கடைகளை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் தனியார் வன்பொருள் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையை உரிமையாளர் பேச்சிமுத்து, 35, மூடிவிட்டு சென்றார்.
நேற்று காலை கடை திறக்க வந்த போது, கதவு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த நான்கு சவரன் தங்க நகைகள், 7,000 ரூபாய் ஆகியவை திருடப்பட்டிருந்தன.
இந்த கடைக்கு அருகில் டானரி சாலையில் உள்ள ரசாயன நிறுவனத்தின் கதவும் உடைக்கப்பட்டு, 70 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.
பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.