சென்னை:திபெத் மக்களுக்கு, மனித உரிமைகள் வழங்க வலியுறுத்தி, சென்னையில் படிக்கும் திபெத்திய மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக மக்கள் மனித உரிமைகள் தினமான நேற்று, திபெத்திய மாணவர்கள் மெமோரியல் ஹால் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், "திபெத் மக்களை, சீன அரசு துன்புறுத்துவதால், 94 பேர்
தீக்குளித்துள்ளனர்.
விரும்பிய தெய்வத்தை வணங்குவதற்கு கூட, எங்களுக்கு சுதந்திரம் இல்லை; பத்திரிகை சுதந்திரமும் இல்லை.
இதனால், உண்மை
தகவலை பத்திரிகைகள் வெளியிட முடியாத நிலை நீடிக்கிறது' என்றனர்.