சென்னை:கமலின், "விஸ்வரூபம்' படம், டி.டி.எச்.,சில் வெளியிடுவதற்கு,
தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இப்படத்தை, டி.டி.எச்., முறையில் வெளியிடுவதற்கு, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், சென்னை தியேட்டர்
உரிமையாளர்கள் சங்கம், கடும் எதிர்ப்பு தெரிவித்து உ ள்ளது.
"டிவி'யில் வெளியிட ஆசை
"விஸ்வரூபம்' படம், அடுத்த ஆண்டு, ஜனவரி, 11ம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன், டி.டி.எச்., முறையில், ஒரு காட்சி, "டிவி'யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்து, தனியார் நிறுவனத்துடன் பேச்சு நடத்தியுள்ளார்.
கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இப்புதிய முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர். கமலின் இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவிக்காமல், தயாரிப்பாளர்கள் மவுனம் காத்து வந்தனர்.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில், நேற்று தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். பின், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் கேயார்
மற்றும் தயாரிப்பாளர்கள்
கூறியதாவது:
கமல், "விஸ்வரூபம்' படத்தை, டி.டி.எச்., முறையில் வெளியிடுவது, தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.
கமலின் துணிச்சலை பாராட்ட வேண்டும். படம், டி.டி.எச்., முறையில், வெளியிடப்பட்டால், தியேட்டருக்கு கூட்டம் வராது என, சொல்ல முடியாது.
எதிர்ப்பு
தமிழகத்தில், 7.30 லட்சம் டி.டி.எச்., இணைப்புகள் மட்டுமே உள்ளன. ஒரு இணைப்புக்கு, 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது.
இவ்வசதியில், எல்லாரும் படத்தை பார்ப்பர் என்றும் சொல்ல முடியாது. இருந்தாலும், கமல் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தை, 90 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளார். ஆனால், இன்னும் படத்தை யாருக்கும் விற்பனை செய்யவில்லை. அவரே, நேரடியாக வெளியிடலாம்.
இதனால், தியேட்டர்காரர்களுக்கோ, வினியோகஸ்தர்களுக்கோ, எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை.
கடந்த ஆண்டு, 129 படங்கள் வெளி வந்ததில், 11 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன.
இவ்வாண்டு, இதுவரை, 148 படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், எட்டு படங்கள் மட்டுமே, வெற்றி பெற்றுள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், "விஸ்வரூபம்' பட வெளியீடு பற்றிய, தங்கள் எதிர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, தயாரிப்பாளர்கள் தெரிவித்து
உள்ளனர்.