ஆவடி:பட்டாபிராம் ரயில் நிலைய "டிக்கெட் கவுன்டரை', ரயில்வே நிர்வாகமே ஏற்று நடத்த
வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டாபிராம் இந்து கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன், இந்து கல்லூரி ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.
இங்குள்ள "டிக்கெட் கவுன்டர்' தனியார் மூலம், அதாவது ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர்களால் ஒப்பந்த அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கிருந்து கும்மிடிப்பூண்டி, தாம்பரம், அரக்கோணம் பகுதிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. திருப்பதி, நெல்லூர், மேல்
மருவத்தூர் பகுதிகளுக்கு
டிக்கெட் வினியோகம் கிடையாது.
இதனால், ஆவடி அல்லது பட்டாபிராம் பகுதிக்கு சென்று அங்கிருந்து, டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
காலை 6:00 மணிக்கு பிறகே திறக்கப்படும், டிக்கெட் கவுன்டர் இரவு 11:00 மணிக்கு மூடப்படுகிறது. இதனால், அதிகாலையில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் ஆவடி அல்லது பட்டாபிராம் செல்ல வேண்டியு உள்ளது.
இதுதவிர, எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு டிக்கெட் வழங்கப்படுவதில்லை.
இதுதவிர, ரயில் வருகை குறித்து அறிவிப்பு செய்யப்
படுவதில்லை.
இதுகுறித்து சமூக
ஆர்வலர் ஜெயக்குமார் கூறியதாவது:
இந்து கல்லூரி ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரால் பயணிகள் சிரமப்படுகின்றனர் என, ரயில்வே
பயணிகள் குறைதீர்ப்பு
கூட்டத்தில் பலமுறை தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது ரயில் நிலையத்தை பயன்படுத்தும்
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, இனியாவது,
டிக்கெட் கவுன்டரை ரயில்வே நிர்வாகமே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.