ஒளிப்பதிவாளர் கர்ணன் மாரடைப்பால் மரணம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

13 டிச
2012
22:43

சென்னை:சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கர்ணன், நேற்று மாரடைப்பால் இறந்தார்.
இவருக்கு வயது, 79. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய, "கற்பகம்' படம் மூலம், தமிழ்ச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக, கர்ணன் அறிமுகமானார்.
"கங்கா, எங்க பாட்டன் சொத்து, ஜம்பு, காலம் வெல்லும் மற்றும் ஜக்கம்மா உட்பட, 25 படங்களை இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர்., நடித்த,"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்', கமல் நடித்த, "சிம்லா ஸ்பெஷல்', ரஜினி நடித்த, "பொல்லாதவன், சிவப்பு சூரியன்', உட்பட, 150 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
சென்னை, சூளைமேட்டில் வசித்து வந்த கர்ணன், கடந்த சில நாட்களாக, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனினின்றி நேற்று இறந்தார்.
இவரது உடல், சூளைமேட்டில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இவருக்கு, சகுந்தலா என்ற மனைவியும், பாமா, தாரா என்ற, இரு மகள்களும் உள்ளனர். கர்ணனின் இறுதிச் சடங்கு இன்று மாலை, 4:00 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நடக்கிறது.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாஞ்சை வேந்தன் - பாஞ்சாலன்குறிட்சி,இந்தியா
14-டிச-201209:47:05 IST Report Abuse
பாஞ்சை வேந்தன் வீர பாண்டிய கட்டபொம்மன் படம் பூஜை போட்ட நாளில் எங்கள் பாஞ்சாலன் குறிட்சிக்கு வந்து வீரம் செறிந்த மண்ணை வணங்கி அதை நீரில் கரைத்து குடித்து விட்டு நீங்கள், ம பொ சி, B . R பந்துலு, நடிகர் திலகம் ஆகியோர் சென்றதாக தாத்தா சொல்வார்கள். அன்று நீங்கள் அங்கு எடுத்துக்கொண்ட போட்டோ இன்றும் வீமராஜா மாமா வீட்டில் அளியா படமாக இருக்கிறது, பார்த்திருக்கிறேன். நீங்கள் மறைந்து விட்ட செய்தி படித்து துயரம் அடைகிறேன். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X