சென்னை:வியாசர்பாடி மற்றும் எம்.கே.பி.நகர் பகுதிகளில், அரசு அறிவித்த நேரத்துக்கு மாறாக, பலமுறை மின்தடை
செய்யப் படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வியாசர்பாடி மற்றும் எம்.கே.பி.நகர் பகுதிகளில், கடந்த நவம்பர் மாதம் காலை, 10:00 முதல், 12:00 மணி வரை, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலில் இருந்தது. டிசம்பர் மாதம் மின்வெட்டு நேரம், 12:00 முதல், 2:00 மணி என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த வாரம் கடந்த ஒரு சில நாட்கள், 12:00 முதல், 2:00 மணிக்கும், சில நாட்கள், 2:00 முதல், 4:00 மணி வரையிலும் மாற்றி மாற்றி மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பகுதி மக்கள் புகார் தெரிவிக்க, பகுதி
யிலுள்ள மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், ""நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தற்சமயம் பிசியாக இருப்பதால்...'' என்ற வாசகமே தொடர்ந்து கேட்கிறது.
வியாசர்பாடி பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில், கூடுதலாக ஒன்று முதல் இரண்டு மணி நேர மின் தடையும் ஏற்படுவதாக, பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.